Saturday, August 24, 2013

கால்நடை மருத்துவ கல்லூரி சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்




தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலையில், கால்நடை மருத்துவ அறிவியல், மீன்வள அறிவியல், உணவுத்தொழில் நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் 360 இடங்களில் 6 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டள்ளதில்,

நேற்று  சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைப்பெற்ற சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான 6 இட ஒதுக்கீட்டில் 3 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற சிறப்பு பிரிவனருக்கான இடங்கள் முழுமையாக பூர்த்தியாகி உள்ளது. காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 3 இடங்கள் பொதுபிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.

நமது எண்ணங்கள்:

1) மாற்றுத்திறனாளிகளுக்கான சதவீதபடி குறைந்தபட்சம் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்ட 6 இடங்களிலேயே 3 இடங்கள் தான் நிரப்பப்பட்டிருக்கின்றன என்பது, வருத்தத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உரியது.

2) சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்கிற்கு மொத்தம் 84 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டும் 42 பேர் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர். இதில் எத்தனை மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு, எத்தனை பேர் கலந்துக் கொண்டனர் என்ற விபரம் இல்லை.

3) போட்டிகள் நிறைந்த இந்நிலையில் இருக்கின்ற, கிடைக்கின்ற வாய்ப்புகளை, நமது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள்  தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமென்பதையும் மனத்தில் வைத்து செயல்பட வேண்டும்.

4) சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள அழைப்பு கிடைத்தும், கலந்துக் கொள்ளாத மாற்றுத்திறனாளிகளும்,  கவுன்சலிங்கில் கலந்துக் கொண்டும் தேர்ச்சி பெறாத,தேர்ச்சி பெறாததற்கான காரணம் அறியாத மாற்றுத்திறனாளிகளும், நமது தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தைத் தொடர்புக் கொண்டு தெரிவித்தால் உங்களும், மற்ற மாற்றுத்திறனாளிகளும் உபயோகமாக இருக்கும்.

No comments: