Monday, July 22, 2013

இதோ மற்றொரு சாட்சியம்: முயன்றால் முடியாதது இல்லை.


தந்தையின் உழைப்பில் தனயனின் வெற்றி இருவரின் முகத்திலும் வெற்றியின் பிரகாசம்!





https://www.facebook.com/photo.php?fbid=535571336491989&set=a.524514704264319.1073741838.317683321614126&type=1&theater

Sunday, July 21, 2013

காமராஜர் நினைவை போற்றி செயலாற்றுவோம்.

நினைவை போற்றி செயலாற்றுவோம்.


நாளைக்கு முகநூல் பக்கம் வரமுடியாது . காமராஜரின் பிறந்தநாள் என்று நமக்கெலாம் தெரியும். காலா காந்தி என்று அறியப்பட்ட பெருமனிதர் அவர்.

சங்கரர்,பட்டினத்தார் ஆகியோரால் கூட துறக்க முடியாத அன்னைப்பாசத்தை துறந்தவர் அவர். அம்மா அருகில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் உடன் வந்து ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று அவர்களை அருகேயே அண்ட விடவில்லை அவர். விதிகளை மீறி அம்மாவுக்கு குழாய் இணைப்பு கொடுத்த பொழுது,அதைத்தானே பிடுங்கி எறிந்து விட்டு ,"நான் பணம் கட்டி அனுமதி கேட்டேனே ? இதற்கு வரி கட்ட எனக்கு எங்க வக்கு இருக்கு?"என்று கேட்டார் அவர்

ராஜாஜியின் ஆட்சி குலக்கல்வி முறையை கொண்டு வர முயன்றதால் கவிழ்ந்த பின்பு தமிழகத்தின் முதல்வர் ஆன காமராஜர் அப்படியே அந்த அமைச்சரவையை வைத்துக்கொண்டார். பிள்ளைகள் பள்ளிக்கு சோறு போட்டால் வருவார்கள் என்று தெரிந்ததும் பிச்சை எடுத்தாவது அரசு பிள்ளைகளை படிக்க வைக்கும் என்றார்

யாரைப்பற்றியும் மேடையில் அவச்சொல் சொல்லி பேச விடமாட்டார். அவரின் கரங்கள் அப்படி பேசுபவரை செல்லமாக பதம் பார்க்கும். தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் கட்சிக்கு இடம் வாங்க அதையும் கொடுத்து விட்டவர். அதிகபட்ச அவரின் ஆடம்பரம் உணவில் முட்டை

பொய்யான ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது வைத்த பொழுது ,"எனக்கு யானைக்கால் வியாதி அப்படின்னு அவனவன் சொன்னா நான் என் காலை தூக்கியா காமிச்சுக்கிட்டு இருக்க முடியும்னேன்!" என்று சொன்னவர். சட்டசபையில் எப்படி கச்சிதமாக பேச வேண்டும் என்று திமுகவுக்கு பாடம் எடுத்தவர் அவர். தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி கதை அவரில் இருந்தே துவங்குகிறது

காமராஜர் தோற்ற பொழுது எதிர்கட்சிகளின் மீது பழி போடவில்லை . "இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' "என்றவர். அப்பொழுது திமுகவினர் "கல்லூரி மாணவன் சீனுவாசனிடம் படிக்காத காமராஜர் தோற்றுப்போனார் "என்று போஸ்டர் அடித்தார்கள். பெரியார்,"படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனுவாசன் வென்றார் !" என்று பதில் போஸ்டர் ஒட்டினார் 


இறந்த பொழுது பத்து செட் கதர் சட்டைகள்,சில நூறு ரூபாய்கள் அவ்வளவு தான் அவரிடம் இருந்தது என்று நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அரசாங்க பணத்தை விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதரின் கொஞ்ச நஞ்ச நினைவுகளாது அறம் சார்ந்த அரசியலை ஞாபகப்படுத்தட்டும்
 

சிந்திக்க தெரிந்தவனுக்கு....



Thanks to:  Jahir Husain

வலிக்காமல் வாழ்க்கை இல்லை.

வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை..

இனி இப்படி ஒருவரை நாம் பார்க்க முடியுமா ? - காமராஜர்




சம்பவம் 1

காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர் . .வெங்கட்ராமன் . ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார் . உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து , அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார் . பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர் , எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே . இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .

சம்பவம் 2

டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் ... காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் . அவரோ மறுத்துவிட்டார் . சுற்றி நின்றிருந்தவர்களுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று .

அப்பொழுது நேரு சொன்னார் ; " காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இபொழுது இவரிடம் இருக்காது " ,என்றார் பிறகு , காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .

சம்பவம் 3

தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது ... அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் :

" அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ?வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , " ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன் """"" என்றார் .....

சம்பவம் 4

காமராஜரின் குடும்பத்தினர் அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தான் . அவரது உடலுக்கு ஈமச்சடங்குகளை காமராஜரின் சகோதரி மகன் ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய . அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல் தீ ..மூட்ட . தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க ... அங்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி .கதறினார் ...
 

Friday, July 19, 2013

கிடப்பில் தமிழக நதிநீர் இணைப்பு திட்டங்கள்....




பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி இந்த தமிழக நதிகளை உடனே இணைப்பதற்காக, 3 திட்டங்கன் தயாரித்துக் கொடுக்கப்பட்டு, ஏழு வருடங்கள் முடியப் போகிறது. ஒவ்வொரு முறையும் வறட்சிக் காலங்களில் அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும்  மல்லுக்கட்டிக் கொண்டும், உச்ச நீதி மன்றத் தீர்ப்பை எதிர் நோக்கிக் கொண்டும், அதற்கான திருப்பி பெறமுடியாத செலவீனங்களும்  நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கான மதிப்பீடும் உயர்வதுமாகத்தான் உள்ளது. விவசாயத்திற்கும், குடிநீருக்கும், அல்லல் படும் மக்களின் போராட்டங்களும் தற்காலிக சமாதானங்களும் தான் நிலைத்திருக்கிறதே தவிர, வாழ்வாதாரங்களுக்கான செயல்களை செயல்படுத்த, ஆட்சி செய்யும் அரசுகளுக்கு ஏனோ நினைவுக்கே வருவதில்லை. 

ஒரு பக்கம் நகரங்கள் விரிவடைவதால், அருகிலுள்ள விளைநிலங்கள் அழிந்து மனைகளாகின்றன. தமிழகத்தின் பெருபாலான நிலங்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதால், விவசாய வளர்ச்சியும் இல்லை. இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிய தடையாகவும் அமையும். வீணாக கடலில் கலக்கும் நீரை, தடுப்பணைகள், ஏரிகள், குளங்களில் சேமித்தும், கால்வாய்கள் மூலமாக நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தினால் விவசாயச்மும் செழிக்கும், நிலத்தடிநீர் பெருகி குடிநீர் பற்றாக்குறையும் மறையும்.

உடனடியாக தாமதமில்லாமல் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க திட்டத்தை துவக்கி செயல்படுத்தினாலே தமிழகம் சிறப்பாக தானே முன்னேறும். ஓட்டுவங்கியை மனத்தில் கொண்டு இலவசங்களை அளிப்பதை விட, இதுபோன்ற செயல்களுக்கு அந்த நிதியை திருப்பலாம். அதேபோல முழுத்திட்டத்தையும் செயல்படுத்தியப் பிறகுதான் நீர் திறக்கப்படும் என்ற நிலையை தளர்த்தி, இலகவான  பகுதியைகளை விரைவாக முடித்து, தாமதம் செய்யாமல் அவ்வப்போதே நீரை செலுத்தி பயன்பாட்டுக்கு அனுமதித்து விட்டால், இலவசத்தை நிறுத்தியதால் ஏற்பட்ட வருத்தத்தை மக்களும் உணர்ந்து மறந்து விடுவார்கள். இப்போது கிடைக்கும் ஓட்டை விட, அதிகமான ஆதரவு கிடைக்குமே தவிர குறையாது என்பது நிச்சியம்.

மத்தியில் கூட்டணி அட்சி, மாநிலங்களின் விருப்பு வெறுப்புகள் பொறுப்பற்ற தனங்கள் இப்படி பல்வேறு காரணங்களால் தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பிலேயே உள்ளது. என்று அது நடைமுறைக்கு வருமென்று கூறவேயியலாத நிலை.   அதுவரை பொருத்திருந்தோமானால் தமிழகம் நாடாக இருக்காது சுடுகாடாக மாறிவிடும். அதனால் இப்பொழுது நீர் குறைவினால் படும் பாட்டிலிருந்து, பாடம் கற்றவர்களாய், தமிழகத்தைக் காக்க, முதலில் தமிழக நதிகளை இணைப்போம். என்றாவது ஒரு நாள் தேசிய நதிநீர் இணைப்பு செயல்பாட்டிற்கு வந்தால், அன்று பக்கத்து மாநிலங்களிலிருந்து நீரை பெற குறைந்த தூரம் வாய்க்கால்கள், கால்வாய்கள் வெட்டி இணைப்பு பெற்று விடலாம்.

இதை இன்றைய அரசு நினைவிற்க் கொள்ளுமா? உணருமா? செயல்படுத்துமா? நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை துவக்கி விட்டால், மத்திய அரசு நிதியையும் பெறலாம், மக்களிடமிருந்து திருப்பி அளிக்கக்கூடிய வைப்பு நிதிகளையும் பெறலாம்.

ஒருவனுக்கு இலவசமாக உணவு அளிப்பதை விட, அவன் உழைத்து சம்பாரிக்க (வருமானமீட்ட) வாய்ப்பு அமைத்துக் கொடுத்தால், அவன் குடும்பமே செழிப்புறும் என்பதை என்று புரிந்து கொள்வார்களோ?


#‎இந்த‬ இணைப்பில் உள்ள படம் ஒரு மாதிரிக்காக மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பார்வைக்காக இந்த இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது.
http://www.skyscrapercity.com/showthread.php?t=1437161

Thursday, July 11, 2013

என்ன கொடுமையடா! எப்போது உணர்ந்து திருந்துவார்களோ!!

பரிதவித்த மாற்றுத்திறனாளிகள்!

தேசிய மாற்றுத்திறனாளர் அட்டையில் டாக்டர்களின் கையெழுத்து பெறுவதற்காக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சமூகநலத்துறை அலுவலகத்தில், சென்ற செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1.30 வரை எந்த மருத்துவர்களும் வரவில்லை. மதியமும் ஆகிவிட்டதால், மாற்றுத்திறனாளி குழந்தைகளும், மற்றவர்களும் பசியுடன் காத்துக் கொண்டிருந்தும், அது குறித்து  சமூகநலத்துறை அலுவலர்களும் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. 

செய்தி அறிந்து பத்திரிக்கை நிருபர்கள் சென்று விசாரிக்க ஆரம்பித்ததும், அவசர அவசரமாக, டாக்டர்களை வரவழைத்து, மருத்துவ சான்று அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். - செய்தி

# என்ன  கொடுமையடா! எப்போது உணர்ந்து திருந்துவார்களோ!!





முயன்றால் முடியாதது இல்லை.



Amazing Things in the World

 https://www.facebook.com/photo.php?fbid=531311973589188&set=a.342434892476898.89335.338077742912613&type=1&theater

Tuesday, July 9, 2013

டாக்டர்களுக்கு கட்டாய உத்தரவு.






மாற்றுத்திறனாளிகள், ரயில் பயண சலுகைப் பெற, அரசு டாக்டர் சான்று அளிப்பது கட்டாயம். இந்த சான்றை வழங்க ரயில்வே துறை விதித்துள்ள விதிமுறைகளை, சில அரசு டாக்டர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்வதாக புகார் எழுந்ததை முன்னிட்டு, புதிய வழிகாட்டுதல் உத்தரவை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.அதில்,...

"அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்று வைத்திருக்கும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு டாக்டர்கள் மறுக்காமல் ரயில் பயண சான்று வழங்க வேண்டும்  சான்று அளிக்கும் படிவத்தில் டாக்டரின் பதிவு எண்ணுடன் கூடிய முத்திரை, பணிப்புரியும் அரசு மருத்துவமனையின் முத்திரை, ஆகியவற்றை தெளிவாக தெரியும் படி முத்திரையிட்டு கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது." இது அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், டாக்டர்களுக்கும் தெரியபடுத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

கண்களை கொடுத்து உதவுங்கள் - Pls Donate Eyes- After Llife

2 min video to make you think for a lifetime
Length: 1:39
 
உன்னத கண்களை
உயிரோட்டமாக நிலைதிருக்க
உதவுங்கள் கொடுத்து
உயிர் பிரிந்த பிறகு.
https://www.facebook.com/dhavappudhalvan.badrinarayananan/posts/608688575837455

Sunday, July 7, 2013

மிக குள்ளமான இந்திய பெண்.


World's smallest lady from India .
How many people pray and wish for her ?


இவர் மிக குள்ளமான இந்திய பெண்.
 நீங்கள் எத்தனை பேர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து,
பிரார்த்தனையும் உதவியும் செய்ய போகிறீர்கள்? 



Saturday, July 6, 2013

URGENTLY !


Brothers Need Help @ Kuala Selangor URGENTLY !
Pls tag and spread the word thanks.
http://sureshrealityproject.blogspot.com/2013/06/brothers-need-help-kuala-selangor.html
— 












https://www.facebook.com/photo.php?fbid=10152937964730313&set=gm.563544350356038&type=1&theater