Monday, January 5, 2009

எங்கே இவர்களின் மனிதாபமானம்

சேலம் சிறுவனின் மரணச்செய்திகள் மனத்தை உருக்குவதாக உள்ளது. என்ன மனிதர்கள் இவர்கள்?. சிறுவனுக்கு எப்படி அடிப்பட்டது என்பது பிறகு இருக்கட்டும். அவன் படித்த பள்ளி நிர்வாகிகளின் செயல் மிகவும் வெட்கப்படக் கூடியதாக உள்ளது. அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போதே பள்ளி சீருடைகளையும், அடையாள அட்டையையும் கழற்றிக் கொண்டு போய்விட்டார்கள் என்ற செய்தியையும், அதை தொடர்ந்து மற்ற சிலரின் செயல்களைப் பற்றி படிக்கும் போதும் இவர்களின் மனித்ததன்மையைப் பற்றி என்ன சொல்ல?.

கிடைக்காதப் பொருள் கிடைத்தும், சட்டங்களின் பெயராலே காலதாமதம் செய்து உபயோகப்படுத்தாமல் நாசம் செய்து மண்ணில் போட வைத்து விட்டார்கள். அருமைச் செல்வனை இழந்த சோகத்திலும் மண்ணுக்கு போகின்ற நிலையிலே உள்ள உடலை, உடல் நோயினால் ஊனமான நிலையில் உள்ள சிலராவது நலம் பெறட்டுமே என்னும் போற்றக்கூடிய எண்ணம் கொண்டு, உடல் தானம் செய்ய,அல்லல் பட்டு  சேலத்திலிருந்து சென்னைக் கொண்டு வந்து, தாய் என்ற முறையிலே பெற்றவள் கையெழுத்திட்டும், சட்டம் என்ற பெயராலே தகப்பன் முறையுள்ளவனின் கையெழுத்தை கேட்க, குடும்ப தகறாரை உட்புகுத்தி  கையெழுத்திட மறுத்தும், காலதாமதம் செய்தும், கிடைத்தற்கரிய பொருளையும், செயற்கரிய செயலையும், கிடைக்கயிருந்த புகழையும்  குப்பையில் போட்டு விட்டான். அவர்களின் குடும்பத்தில் யார் மேல் குற்றமென்று குடும்ப விவகாரத்தில் நுழையவிரும்ப வில்லை. தன் மகனின் உடலை தானம் செய்ய முடிவெடுத்து செயல்படுத்த முனைந்த அந்த தாயின் இழப்பிற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.

சட்டத்தின் படியே நடக்க வழிகளாயில்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு வெறும் வாய்மொழி உத்திரவிட்டே அழைத்து வர செய்திருக்கலாம். ஒப்புதல் பெறவேண்டிய விண்ணப்பத்தை ஃபேக்ஸ் மூலமாக மருத்துவ அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி, அவசர நிலையை விளக்கி, தேவைபட்டிருந்தால் சாம, பேத, தண்டத்தை அவனிடம் பயன் படுத்தி கையெழுத்து பெற்று, அதிகாரிகளும் சான்று ஒப்பமிட்டு, திரும்ப ஃபேக்ஸ் மூலமாக அனுப்ப செய்து ஒரு சில மணித்துளிகளிலேயை சட்ட முறைகளை முடித்து தானம் பெற்றிருக்கலாமே. சட்டத்தை எதற்கெதற்கோ வளைப்பவர்கள், ஒரு நல்ல செயலுக்கு சிறிது வளைத்தாலென்ன?. ஏன் செய்யவில்லை?. யார் செத்தாலென்ன? யார் சிரமப்பட்டாலென்ன? என்ற அலட்சியமும் அக்கறையின்மையுமே என எண்ணத் தோன்றுகிறது. நிலையின்றி துடிக்கிறது இதயம். உயிரிழந்த சிறுவனை நினைத்தும், நோய் தீர வழிகிடைத்தும், பயன்றறு போனதினால் திகைத்திருக்கும் நோயளிகளை நினைத்தும். அந்த சிறுவனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யுமென நினைக்கிறேன்.

ஏ.எம்.பத்ரி நாராயணன்.
சென்னை.
28/12/2008.

பின் குறிப்பு::: பத்திரிக்கைகளில் வந்த செய்திகளைப் படித்து எனக்கு ஏற்பட்ட வருத்தத்தினால், இதை எழுதியுள்ளேன். இந்த செய்தியில் ஏதேனும் குறைகளோ தவறுதல்களோ விடுபட்டிருந்தாலோ வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதை ''தினமலர்'' நாளிதழில் 'உங்கள் இடம்'