Saturday, August 24, 2013

கால்நடை மருத்துவ கல்லூரி சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்




தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலையில், கால்நடை மருத்துவ அறிவியல், மீன்வள அறிவியல், உணவுத்தொழில் நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் 360 இடங்களில் 6 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டள்ளதில்,

நேற்று  சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைப்பெற்ற சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான 6 இட ஒதுக்கீட்டில் 3 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற சிறப்பு பிரிவனருக்கான இடங்கள் முழுமையாக பூர்த்தியாகி உள்ளது. காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 3 இடங்கள் பொதுபிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.

நமது எண்ணங்கள்:

1) மாற்றுத்திறனாளிகளுக்கான சதவீதபடி குறைந்தபட்சம் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்ட 6 இடங்களிலேயே 3 இடங்கள் தான் நிரப்பப்பட்டிருக்கின்றன என்பது, வருத்தத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உரியது.

2) சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்கிற்கு மொத்தம் 84 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டும் 42 பேர் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர். இதில் எத்தனை மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு, எத்தனை பேர் கலந்துக் கொண்டனர் என்ற விபரம் இல்லை.

3) போட்டிகள் நிறைந்த இந்நிலையில் இருக்கின்ற, கிடைக்கின்ற வாய்ப்புகளை, நமது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள்  தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமென்பதையும் மனத்தில் வைத்து செயல்பட வேண்டும்.

4) சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள அழைப்பு கிடைத்தும், கலந்துக் கொள்ளாத மாற்றுத்திறனாளிகளும்,  கவுன்சலிங்கில் கலந்துக் கொண்டும் தேர்ச்சி பெறாத,தேர்ச்சி பெறாததற்கான காரணம் அறியாத மாற்றுத்திறனாளிகளும், நமது தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தைத் தொடர்புக் கொண்டு தெரிவித்தால் உங்களும், மற்ற மாற்றுத்திறனாளிகளும் உபயோகமாக இருக்கும்.

Tuesday, August 20, 2013

வெற்றிக்கு தேவை அதிக பயிற்சியும் முனைப்பும் .







கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரில், மாற்றுத் திறனாளிகளுக்கான உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியாவின் சார்பில் சரத் கயாக்வத் என்ற ஒரே ஒரு மாற்றுத் திறனாளி நீச்சல் வீரர் கலந்துக் கொண்டார்.

இவர் 200 மீ, தனி நபர் 'மெட்லே' (10வது இடம் ),  100 மீ., 'பிரஸ்ட்ஸ்டிரோக்' ( 7 வது இடம் ),    100 மீ., 'பட்டர்ஃபிளை' மற்றும் 50 மீ., ஃபிரீஸ்டைல்  ( 14 வது இடம் ) பிடித்தார்.
ஆனால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட    50 மீ., ஃபிரீஸ்டைல் ஃபைனலில் 14 வது இடம் பிடித்தது எமாற்றத்திற்குறியதாக  நாளிதழில் செய்தி வந்துள்ளது.

மேலும் சிறப்பான பயிற்சி எடுத்து வெற்றி மேல் வெற்றியடைய மாற்றுத் திறனாளி நீச்சல் வீரரான "சரத் கயாக்வத்"தை வாழ்த்துவோம்.

*நீச்சலில் விருப்பமுள்ள திறமையான மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, சிறப்பன பயிற்சியளிக்க இந்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை வேண்டும். ஒரு நபர் என்பதிலிருந்து திறமையான பல மாற்றுத் திறனாளி வீரர்கள் என்ற நிலை உருவாகும்.

Friday, August 9, 2013

தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மல்டிமீடியா பயிற்சி.





1) கை,கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள்
100 நபர்களுக்கு ஒரு மாத மல்டிமீடியா பயிற்சியும்,
100 நபர்களுக்கு ஒரு மாத டிஜிட்டல் ஃபோட்டோகிராபி பயிற்ச்சியும்
இலவசமாக,தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால், சென்னையில் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 21 இலட்ச ரூபாய் ஒதுக்கி உத்தரவு இட்டுள்ளார்.

2) பயிற்சி பெறுபவர்களுக்கு விடுதி வசதியும், பயிற்சி உதவி தொகையாக ரூபாய் 1000/= வழங்கப்படும்.

3) பயிற்சியில் சேர தகுதி :

1) கை,கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள்
2) 16 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

4) தேவையான சான்று :
1) குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2) கல்வி தகுதி சான்று நகல்.
3) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்.
4) பெயர், முகவரி, தொலைபேசி எண், கல்வித்தகுதி, மாற்றுத்திறன் தன்மை, சதவித அளவு மற்றும் விடுதி தேவையா என்ற விபரங்களை தெளிவாக எழுதி மேற்காணும் சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

5) அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகர்களுக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
6) கடைசி நாள்: இம்மாதம் (ஆகஸ்ட் ) 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

** குறுகிய காலமே இருப்பதால் இச்செய்தியை வாசித்ததும், மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் சென்று சேர உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
உங்கள்
-தவப்புதல்வன்.

Wednesday, August 7, 2013

சாதனைகள் பல - எம். பிரகாஷ் மும்பை







 
 
போலியோவால் பாதிக்கப்பட்டவர்
அரபிக் கடலில் 42 கிமீ தூரம் நீந்தி சாதனை செய்ய காத்திருக்கும் தமிழர்

மும்பையின் ஒர்லி குடிசைப் பகுதியில் வசித்து வரும் எம். பிரகாஷ் (35) என்ற தமிழர், மார்ச் 8ம் தேதி அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி கடந்து உலக சாதனை நிகழ்த்த இருக்கிறார். கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து ராய்கட் மாவட்டம் ரேவாஸ் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரம் நீந்தி பிறகு அங்கிந்து திரும்புவார். இந்த 42 கிலோ மீட்டர் தூரத்தை 15 மணி நேரத்தில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். பிரகாஷ் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் பாதிக்கப் பட்டவர்.

எனினும் தனது அயராத முயற்சியால் பல சாதனைகளை செய்துள்ளார். நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 81 தங்கம், 29 வெள்ளி மற்றும் 27 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது, மும்பை-ரேவாஸ்-மும்பை ஸ்விம்மதான் போட்டியில் கலந்து கொண்டு இந்த உலக சாதனையை நிகழ்த்தவிருக்கிறார். ஒர்லி, மோதிலால் நகரில் உள்ள மதராஸ்வாடியில் பிறந்த பிரகாஷ், அங்கேயே வசித்து வருகிறார். அந்த பகுதியில் அரபி கடலில் கடக்கும் ஒரு சாக்கடை நீரில்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் நீச்சலை அவர் கற்றுக் கொண்டார்.

பின்னர் உள்ளூரில் நடந்த நீச்சல் போட்டி ஒன்றில் அவர் பங்கேற்றார். அதை நேரில் பார்த்த மூத்த போலீஸ் அதிகாரியான பாலாசாகேப் காட்கே (தற்போது உதவி போலீஸ் கமிஷனராக இருக்கிறார்) பிரகாசிடம் மறைந்து கிடக்கும் திறமையை கண்டு ஆச்சரியமடைந்தார். ஒர்லி, போலீஸ் முகாமில் உள்ள நீச்சல் குளத்தில் பிரகாஷுக்கு முறைப்படியான நீச்சல் பயிற்சி அளிக்க அவர் முயற்சி எடுத்துக் கொண்டார்.

தனது நீச்சல் திறமைக்கும், நீச்சல் போட்டிகளில் இத்தனை பதக்கங்கள் கிடைத்ததற்கும் போலீஸ் அதிகாரி காட்கேதான் காரணம் என்று பிரகாஷ் நன்றியுடன் குறிப்பிட்டார். மேலும் வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச பெண்கள் தினம் என்பதால் அந்த நாளில் இந்த உலக சாதனையை நிகழ்த்தி அதை தன் தாயார் எம்.பாலசுந்தரிக்கு அர்ப்பணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

பிரகாஷ் கடந்த 18 ஆண்டுகளாக நீச்சலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். சுவாபிமான் சங்கட்டணா தலைவர் நிதேஷ் ராணே மற்றும் வருமான வரி கமிஷனர் வி.மகாலிங்கம் ஆகியோர் கொடுத்த ஊக்கம் காரணமாகவே வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைக்க உள்ளார்.

பிரகாஷுக்கு சத்யா என்ற மனைவி, 6 வயதில் ஹரிஹரன் என்ற மகன் மற்றும் 4 வயதில் வர்ஷினி என்ற மகள் உள்ளனர். நமது நாட்டில் கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகளுக்கு அவ்வளவாக ஊக்கம் அளிக்கப்படுவதில்லை என்பது பிரிகாஷின் ஆதங்கம். அவர் இது பற்றி கூறுகையில், “கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகளுக்கு அதிகாரிகள் ஊக்கம் அளிப்பதில்லை. இது ஏன் என்று தெரியவில்லை.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் ஆண், பெண் உட்பட 2.20 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு வாயளவில் அனுதாபம் தெரிவிப்பதற்கு பதிலாக சிறிது ஆதரவு கொடுத்தாலே மிகப்பெரிய சாதனைகளை செய்து காட்டுவார்கள்என்றார்.
 
https://www.facebook.com/photo.php?fbid=553138558059099&set=a.198320656874226.47263.100000888786399&type=1&theater
 
Thanks to: 
 
 

Tuesday, August 6, 2013

தயிரோ... தயிர். - மருத்துவக்குறிப்பு



புரதம், கால்சியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, ரிபொஃப்ளோவின்  விட்டமின் பி2, கொழுப்பு சத்து பல சத்துக்கள் தயிரில் உள்ளன. 100 மில்லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது.
ஒல்லியாக இருப்பவர்கள்,நுரையிரல் பிரச்சனை உள்ளவர்கள் நிச்சியம் தயிர் சாப்பிட வேண்டும்.மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள், பிரயாணி போன்ற உணவை சாப்பிடும்போதும் தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் நல்லது.ஏனெனில், இவை உணவை செரிக்கக் கூடிய பாக்டீரியாக்களை உருவாக்குகின்றன. அதனால் தான் தமிழர்கள் உணவில் கடைசியாக தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்கின்றனர்.

எடை அதிகரிக்க விரும்புபவர்கள் தயிரில் சர்க்கரை சேர்த்து லஸ்ஸி போல் சாப்பிடலாம். இரவில்  தயிர் சாப்பிட்டால், உடனடியாக தூங்க செல்லாமல், 10 நிமிடம் நடைப் பயிற்சி செய்தபின் தான் தூங்க செல்ல வேண்டும். உடல் பருமன் உள்ளவர்கச்ளும், சர்க்கரை நோயாளிகளும் அதிகமாக தயிர் சேர்த்துக் கொள்ளகூடாது.

100 மில்லி மோரில் வெறும் 15 கலோரி தான் கிடைக்கிறது. ஆனால் இதில் நிறைய சத்துக்கள் இருப்பச்தால், எல்லோரும் மோர் அருந்த வேண்டியது அவசியம். எந்த நோயால் பாதிக்கப்பட்டிரிந்தாலும் மோர் குடிக்கலாம். தினமும் மோர் குடிப்பது உடலுக்கு நல்லது. பெப்டிக் அல்சர் வராமல் தடுக்க, பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க தினமும் மோர் அருந்துவது அவசியம். அதிக எடையால் பாதிக்க பட்டவர்கள்  அதிக அளவு மோர் குடிக்க வேண்டும். மோர் வெப்பத்தை தணிக்கும். சளி பிடித்திருப்பவர்கள் மோரை *மிதமாக சுட செய்து குடிக்கலாம்.

**மோருடன் இஞ்சி, வெந்தியம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றையும் சேர்த்து அருந்துவது இன்னும் நல்லது.

நலமுடன் இருப்போம்.
நண்பருடன் அரட்டை அடிக்க.

இனிய நல்நாள் வாழ்த்துக்கள் நட்புகளே!

நன்றி: டயடீசியன் ஷீலா


Saturday, August 3, 2013

பாவம், எந்த வரமோ?





https://www.facebook.com/photo.php?fbid=150500498471777&set=a.147672358754591.1073741829.100005354820032&type=1&theater


The parents can't afford it so CNN and Facebook are agreeing to pay half the expenses for the family and the kid so please dont ignore and help and spread the word
1 Like = 20$
1 comment = 50$
1 share = 100$

Friday, August 2, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் காலிபர் வழங்கும் முகாம்



விபத்தினால் கால்களை இழந்த மற்றும் போலியோவினால் நடக்க இயலாத குழந்தைகலுக்கு செயற்கை கால்கள் மற்றும் காலிபர் வழங்க 10/08/2013 சனிக்கிழமை அன்று சென்னையில் அண்ணாநகரில் உள்ள அகவாழ் அறக்கட்டளை சார்பில் முகாம் நடைபெற உள்ளது. அன்று அளவேடுக்கப்படும் தகதியுள்ள 50 பேர்களுக்கு, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைப்பெறும் நிகழ்ச்சியில் செயற்கை கால்கள் மற்றும் காலிபர் வழங்ப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
ஏ.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட், AC -124, சாந்தி காலனி மெயின் ரோட், அண்ணாநகர் சென்னை- 600 040.
தொலைபேசி:- 044-26264661,
கைப்பேசி: 98400 66111, 99414 66478.

A.C.Agarwal Charitable Trust, AC - 124, Santhi Colony Main Road, Anna Nagar, Chennai - 600 040.
Phone:- 044-26264661,
Cell: 98400 66111, 99414 66478.

Thursday, August 1, 2013

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா? - மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு தகவல்



 1)   அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2881 முதுகலை ஆசிரிய பணியிடங்களுக்காக,சென்ற ஜூலை மாதம் 21ம்  தேதி நடைப்பெற்ற,  ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி. ) ல் 1.67 இலட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகள் 8526 பேர். இவர்களில் பார்வையிழந்தோர் 971 பேர்.

2) ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி. )   ஆகஸ்ட் மாதம் வருகின்ற 17ந் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு 2,68,160 பெரும், 18ந்  தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வை 4,11,634 பெரும் எழுத உள்ளனர்.

3) டி.என்.பி.எஸ்.சி.குரூப் 4க்கான தேர்வு, 
கீழ்காணும் 5566 பணியிடங்களுக்கா, ஆகஸ்ட் மாதம் வருகின்ற 25ம் தேதியில், தேர்வு நடைப்பெற உள்ளது.

1) Junior Assistant (Non-Security) - இளநிலை உதவியாளர் (உத்தரவாத தொகை தேவையற்ற பணி)
2) Junior Assistant (Security) - இளநிலை உதவியாளர் (உத்தரவாத தொகை தேவை )
3) Bill Collector, Grade-I -
பில் கலெக்டர், தரம்- 1
4) Typist                  -
தட்டச்சர்,              
5) Steno-Typist, Grade – III -  சுருக்கெழுத்தாளர்-தட்டச்சர், தரம் - III
6) Field Surveyor -  புல அளவையாளர்
7) Draftsman -  வரைவாளர்

**இதில் நமது கோரிக்கை என்னவென்றால்,

1) இந்த பணி  இடங்களுக்கு தேர்ச்சி, மதிப்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 3% அளவையும் முழுமையாக நியமிக்கப்பட்ட விவரத்தையும் வெளிப்படையாக, தெளிவாக வெளியிட பட வேண்டும். உடல் ஊனமுற்றோர், பார்வையிழந்தோர், காது கேளாதோருக்கென  தலா  1% உள்ளது மாற்றுத் திறனாளிகளில் ஒரு பிரிவினருக்கான பணி இடம் காலியாக / தகுதியானவர் இல்லாது இருப்பின், மாற்றுத் திறனாளிகளில் உள்ள மற்றொரு பிரிவினருக்கு ஒதுக்க வேண்டுமே தவிர பொது பிரிவினருக்கோ மற்ற வகையிலோ பணிக்கான வாய்ப்பை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. 

2) பணி ஒதுக்கீட்டில் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் நல்ல உடல்நிலையுடன் இருப்பவர் தனக்கு வசதியான இடங்களைப் பெற்றபிறகு, வாழ்வே போராட்டமாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்களுக்கு சிரமம் அளிக்கக்கூடிய இடங்கள்தான் மிஞ்சும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா?