Thursday, August 1, 2013

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா? - மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு தகவல்



 1)   அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2881 முதுகலை ஆசிரிய பணியிடங்களுக்காக,சென்ற ஜூலை மாதம் 21ம்  தேதி நடைப்பெற்ற,  ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி. ) ல் 1.67 இலட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகள் 8526 பேர். இவர்களில் பார்வையிழந்தோர் 971 பேர்.

2) ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி. )   ஆகஸ்ட் மாதம் வருகின்ற 17ந் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு 2,68,160 பெரும், 18ந்  தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வை 4,11,634 பெரும் எழுத உள்ளனர்.

3) டி.என்.பி.எஸ்.சி.குரூப் 4க்கான தேர்வு, 
கீழ்காணும் 5566 பணியிடங்களுக்கா, ஆகஸ்ட் மாதம் வருகின்ற 25ம் தேதியில், தேர்வு நடைப்பெற உள்ளது.

1) Junior Assistant (Non-Security) - இளநிலை உதவியாளர் (உத்தரவாத தொகை தேவையற்ற பணி)
2) Junior Assistant (Security) - இளநிலை உதவியாளர் (உத்தரவாத தொகை தேவை )
3) Bill Collector, Grade-I -
பில் கலெக்டர், தரம்- 1
4) Typist                  -
தட்டச்சர்,              
5) Steno-Typist, Grade – III -  சுருக்கெழுத்தாளர்-தட்டச்சர், தரம் - III
6) Field Surveyor -  புல அளவையாளர்
7) Draftsman -  வரைவாளர்

**இதில் நமது கோரிக்கை என்னவென்றால்,

1) இந்த பணி  இடங்களுக்கு தேர்ச்சி, மதிப்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 3% அளவையும் முழுமையாக நியமிக்கப்பட்ட விவரத்தையும் வெளிப்படையாக, தெளிவாக வெளியிட பட வேண்டும். உடல் ஊனமுற்றோர், பார்வையிழந்தோர், காது கேளாதோருக்கென  தலா  1% உள்ளது மாற்றுத் திறனாளிகளில் ஒரு பிரிவினருக்கான பணி இடம் காலியாக / தகுதியானவர் இல்லாது இருப்பின், மாற்றுத் திறனாளிகளில் உள்ள மற்றொரு பிரிவினருக்கு ஒதுக்க வேண்டுமே தவிர பொது பிரிவினருக்கோ மற்ற வகையிலோ பணிக்கான வாய்ப்பை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. 

2) பணி ஒதுக்கீட்டில் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் நல்ல உடல்நிலையுடன் இருப்பவர் தனக்கு வசதியான இடங்களைப் பெற்றபிறகு, வாழ்வே போராட்டமாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்களுக்கு சிரமம் அளிக்கக்கூடிய இடங்கள்தான் மிஞ்சும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா?

No comments: