Sunday, March 29, 2015

கேள்வி பதில் - 4




Selvan Selva:

எனக்கு பார்வைக்குறைவு 100% சதவீதம். பி.ஏ., ஆங்கிலத்தில் (B.A.,-English ) முடித்திருக்கிறேன். அடுத்ததாக பி.எட் (B.ed. ) படிக்க நினைக்கிறேன் இலவசமாக இட ஒதுக்கீடு வாங்க முடியுமா?


Dhavappudhalvan Badrinarayanan A M:

வணக்கம் நண்பரே.  நீங்கள் பி.ஏ.வில் உயர்  மதிப்பெண்களை வாங்கியிருந்தால், அதை  வைத்து சில தனியார்  கல்லூரி நிர்வாகிகள் மனமிறங்கி, இலவச இட ஒதுக்கீடு செய்யலாம்.

சாதாரமாக பி.எட் படிப்பில் எந்த கல்லூரியில் சேர்ந்தாலும் அரசின் உத்தரவு  படி கல்வி கட்டணம் கட்ட தேவையில்லை. கல்லூரிக்கான    மற்ற கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

அரசின் சலுகைகளைப் பெறக்கூடிய தகுதியுள்ள குடும்பத்தில் ஒரு  வாரிசுக்கு, மேற்பட்டபடிப்பு வரை படிக்க அரசு உதவி உண்டு. அக்குடும்பத்தில் வேறு யாரேனும் பட்டப்படிப்பு படித்திருந்தால் அடுத்தவருக்கு இச்சலுகை  கிடையாது.

மாற்றுத்திறனாளிக்கான கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

‪#‎எம்முடைய‬ பதிலில் குறையோ தவறோ இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டி திருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே

Saturday, March 28, 2015

எதுக்கெடுத்தாலும்

எதுக்கெடுத்தாலும் போராட வேண்டியிருக்கு.
‪#‎நட்டு‬ கழண்டு போகுது


ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு - மாற்றுத்திறனளிகளுக்கு

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு.


தேதி: ஜூன் 7ம் தேதி
தேர்வு நாடு முழுவதும் 50 இடங்களில் நடைப்பெறும்.

விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவு, ஓ.பி.சி., ஓ.சி.ஐ.
பிரிவினருக்கு ரூபாய் 1000/=

எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனளிகளுக்கு 800/=

+2 தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள், தங்கள் பெயரை பதிவு செய்ய இணையதளம்:

www.jipmer.edu.in

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்

கடைசி நாள்: மே 4ம் தேதி

கட்டணம் செலுத்தும் முறை:
நெட் பேங்கிங்,
கிரிடிட்கார்டு,
டெபிட் கார்டு
மட்டுமே

மேலும் விபரங்களுக்கு:
1800 266 0371
கட்டணமில்லா எண்

செயற்கை பார்வை தரும் நவீன கருவி

செயற்கை பார்வை தரும் நவீன கருவி இந்தாண்டுக்குள் இந்தியாவில்

கேள்வி பதில் - 3




Selvan Selva


Hi friends enaku eye prblm enaku certificate la 100 % iruku..uthavi thogaikaga apply panamudiuma enaku konjam detail solringala

நண்பர்களே, எனக்கு கண் பார்வை  பிரச்சனை. சான்றிதழில் 100% சதவீதம் குறித்துள்ளனர். உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்க முடியுமா?
விபரம் தெரிந்தவர்கள் உதவ முடியுமா?


Dhavappudhalvan Badrinarayanan A M:
அன்பு selvin selva வாழ்த்துக்கள். அரசு மூலம் ஏதேனும் ஒரு உதவிதான் பெறமுடியும். உதாரணமாக மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற்றால் மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெற அனுமதியில்லை.

மாதாந்திர உதவித்தொகை பெறுபவர்கள் மற்ற உதவித்தொகைகளோ, கடனோ பெற முடியாது. வேலை வாய்ப்பில் பதித்து உதவித்தொகை பெறுபவர்களுக்கும் பொருந்தும்.
‪#‎ஆனால்‬ மருத்துவ காப்பிடு திட்டங்களுக்கும் உதவித்தொகை பெறுவதற்கும் சம்மந்தம் கிடையாது . உதவித்தொகை பெறுபவர்கள் மற்ற உதவி களான செயற்கை உறுப்புகள், மூன்று சக்கர சைக்கிள்கள், விழியிழந்தோருக்கான சிறப்பு கணினி, கண்கண்ணாடிகள், மடக்கு குச்சிகள், பாடங்களை கற்க டிவிடி, காது கேளாதோருக்கான செவி ஒலிக்கருவி போன்ற வேறு உதவிகள் பெறுவதற்கு எந்த தடையுமில்லை.

உதவிகள் பெற:
1) கல்வி உதவித்தொகைக்கு - பயிலும் பள்ளி , கல்லூரிகளிலேயே விண்ணப்பங்கள் கிடைக்கும்.
2) கல்வி, கடை, தொழிலுக்கான கடன்கள்: கடனுக்குரிய அளவு பொருத்தும், முறைகளை உள்ளடக்கியும் அதற்குரிய பல இடங்களில் அணுக வேண்டும்.
3) செயற்கை உறுப்புகள்: மாவட்ட சமுக நலத்துறை, மாவட்ட ஆட்சியர்.
4) மாதாந்திர உதவித்தொகை: மாவட்ட ஆட்சியர், மாவட்ட சமுக நலத்துறை, சமுக நலத்துறை தனி வட்டாட்சியர் ( தாசில்தார் ) வட்டாட்சியர் அலுவலகம்.

‪#‎முக்கியமாக‬ உதவிகள் பெறுவதற்கு கையூட்டு (இலஞ்சம் ) கொடுத்து பழகவும், முயற்சிக்கவும் வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

‪#‎எம்முடைய‬ பதிலில் குறையோ தவறோ இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டி திருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே
 

கேள்வி பதில் - 2


Gandhi Karuppasamy
நான் பேரூராட்சி கடை ஏலத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திரனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடையை அதிக ஏலத்தொகைக்கு ஏலம் எடுத்து விட்டேன். மாற்றுத்திரனாளிகளுக்கு மானியம் கழிப்பார்கள் என்ற எண்ணத்தில். மானியம் கிடைக்குமா?முன்பணம் கட்டவேண்டுமா?தெரிந்த நண்பர்கள் ஆலோசணை கூறவும் . மேற்கொண்டு எங்கு முறையிடலாம்.

Dhavappudhalvan Badrinarayanan A M:

33 கடைகள் இருந்தால் ஒரு கடை மாற்றுத்திறனாளிக்கு கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும் . ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டியிருந்தால் ஏல கோரிக்கைப்படி ஒதுக்கப்படும். போட்டியில்லாமல் இருந்தால் பேரூராட்சி குறித்திருக்கும் குறைந்தபட்ச துகைக்கு ஒதுக்கப்படும். அதுவும் அதிகமாகப்பட்டால் பேரூராட்சி தலைவர், நிர்வாக அதிகாரியிடம் மாற்றுத்திறனாளிக்கு உரிய சான்றுகளுடன் வாடகையை குறைக்க விண்ணப்பிக்கலாம். வாடகைக்கு ஏற்றபடி முன்பணம் கட்ட வேண்டும்.
*தொழில் நடத்த பெறுகின்ற கடன்களுக்கு மட்டுமே மானியம் உண்டு. அதுவும் கடனை முறைப்படி முழுமையாக செலுத்தினால் தான்.
‪#‎எம்முடைய‬ பதிலில் குறையோ தவறோ இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டி திருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே

Monday, March 23, 2015

இப்படியொரு நிலை


சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  இப்படியொரு நிலை ஏற்ப்பட்டால் என்ன சொல்வார்கள் ?


Friday, March 13, 2015

'ரிவர்சில்' இயங்கும் #மாற்றுத்திறனாளி வாகனம்:


திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரி மாணவர்கள் 'ரிவர்சில்' இயங்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் சிலமாற்றங்களை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் தயாரிக்கப்படுகிறது. இந்த வாகனங்களை 4 சக்கர வாகனங்களைப் போல'ரிவர்சில்' இயக்க முடியாது. குறுகிய தெருக்கள், வளைக்க முடியாத இடங்களில், இறங்கி பின்புறமாக தள்ளிச் செல்ல வேண்டும். இதுபோன்ற சமயங்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க'ரிவர்சில்' இயங்கும் வாகனத்தை திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரி வடிவமைத்துள்ளது. ஆட்டோமொபைல் பேராசிரியர் ராஜவேல் உதவியோடு இறுதியாண்டு மாணவர்கள் எஸ்.லோகேஷ், டி.சிவா, ஏ.ஹெர்பாட்பிலிப் வடிவமைத்துள்ளனர்.


அவர்கள் கூறியதாவது:

'ரிவர்சில்' இயக்க வசதியாக வாகனத்தின் இடதுபுறத்தில் 'கியர் பாக்ஸ்' பொருத்தினோம். இதை தனித்தனி செயின் மூலம் இன்ஜின், பின்சக்கரத்தில் இணைத்தோம். 'கியர் பாக்சில்' உள்ள கம்பியை கையால் பின்பக்கம் தள்ளிவிட்டு வாகனத்தை 'ரிவர்சில்' இயக்க முடியும், இதற்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் செலவானது. அதிகளவில் தயாரிக்கும்போது செலவை குறைக்க முடியும், என்றனர். மாணவர்களை கல்லூரி இயக்குனர் சந்திரன், கல்லூரி முதல்வர் பழனிச்சாமி, துறைத்தலைவர் சிவக்குமார் பாராட்டினர்.


தகவல்:

http://www.dinamalar.com/news_detail.asp?id=1203839

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அதி நவீன செயற்கை உறுப்புகள்











மாநில, மத்திய, உலகளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள், 'பார ஒலிம்பிக் போட்டியில் ' கலந்துக் கொள்ளும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 25 நபர்களுக்கு, நடப்பாண்டு முதல் அதி வேகமாக செயல்படத்தக்க சிறப்பு  நவீன செயற்கை உறுப்புகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஒருவருக்கு, அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு  நவீன செயற்கை உறுப்புகள் வழங்கப்படும். தகுதியுடையவர்கள்  மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் அல்லது அந்தந்த மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம், தங்கள் பெயர், மற்றும் தேவையான முழு விவரங்களை தெரிவித்து பதிவு செய்துக் கொள்ளலாம்.


#முக்கியமாக இந்த  சிறப்பு  நவீன செயற்கை உறுப்புகளை உங்களுக்கு கிடைக்க உதவுகிறேன் என இலஞ்சம் கேட்டால் கொடுத்து ஏமாறவேண்டாம் என்பதையும்   அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.