Friday, August 14, 2015

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஒன்றியம் வாரியாக 14 வயதுக்குட்பட்ட  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்.





#தவிர விட்டவர்கள் மற்ற தேதிகளில் அருகில் நடைப்பெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்கிறேன் 

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை






சென்ற ஆகஸ்ட் 11ம் தேதி சங்ககிரி பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. அதில் கலந்துக் கொண்ட 128 பேரில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டது. 3 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

#இந்த முகாம் நடக்க காரணமான திட்டத்திற்கும், நடத்திய அதிகாரிகள், மருத்துவர்களுக்கு நன்றியினையும் மகிழ்வினையும் இத்தருணத்தில் பகிர்ந்துக் கொள்கிறோம்.


#குறிப்பாக அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளுக்கும், வயது வித்தியாசமில்லாமல், அந்தந்த பகுதிகளில் முன்கூட்டியே தெளிவாக விளம்பரம் செய்து முகாம்கள் நடத்தினால், அனைத்து  மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களின் துணையாளர்களுக்கும் பண, நேர விரயத்துடன், பயண சிரமம் பெருமளவு  குறையும் என்பதை சம்மந்தபட்ட அதிகாரிகள் உணர்ந்து ஆவன செய்ய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்கள் என நம்பி தமிழகத்தின் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.     

Wednesday, August 12, 2015

கேள்வி பதில் - 5



Dhavappudhalvan Badrinarayanan A M
     தமிழ்நாடு அரசாங்க சேவை ஆணைக்குழு  நடத்தவிருக்கும் குரூப் 1 தேர்வுகளை (TNPSC GROUP 1 EXAMS ), பகுதி பார்வை குறைபாடு  ( Visually impaired )  40% சதவீதத்திற்கு மேலுள்ளவர்கள் தேர்வு எழுத  அனுமதி உண்டாவென்பதை  தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பேராசிரியர். சகாதேவன் அவர்கள் அளித்த பதில்: 
     மத்திய அரசு வெளியிட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு முழுமையாக ஏற்று, அதனை அமுல்படுத்தும் வகையில் ஆணைகள் வெளியிட்டுள்ளது. அதன்படி 40% விழுக்காடு (சதவிகிதம்)   மாற்றுத்திறனுடைய அனைவரும் தமிழ்நாடு தேர்வு ஆணையத்தால் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் பங்குபெற தகுதியுடையவர்களாவர்.
எனினும் தமிழ்நாடு அரசு ஆணையம் வெளியிடுகின்ற விளம்பரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட ( Identified Post ) பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

#தமிழ்நாடு உதவிக்கரம்  மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் ''உதவிக்கரம்'' ஜூலை 2015 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு செய்திகள்

வேலை வாய்ப்பு செய்திகள் 








இன்னும் பல வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 10/08/2015 சேலம் தினத்தந்தி நாளிதழ் பக்கம் எண்: 15.






நன்றி: தினத்தந்தி சேலம்