Saturday, November 30, 2013

அசத்தலான கண்டுபிடிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர மிதி வண்டிக்கு, சூரிய மின்சாரத்தில் இயங்கும் படியாக அமைந்திருந்த கண்டு பிடிப்பு. மாற்றுத் திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

பெட்ரோலால் இயங்கும் ஸ்கூட்டர்களை அரசு உத்தரவு படி, இலவசமாக  பெற தகுதியில்லா, ஆனால்  கையால் பெடல் சுற்றி இயக்கும் மூன்று சக்கர இலவச சைக்கிளைப் பெற தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, சிரமத்தைக் குறைக்கும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும் முறையில் மாற்றியமைத்து வழங்கினால், பேருதவியாக இருக்கும்.

தமிழக முதலமைச்சர் அவர்கள், இதை சிந்தனையில் இருத்தி, சூரிய சக்தியால் இயங்கும் வகையில் மூன்று சக்கர சைக்கிள்களை மாற்றி,  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உத்தரவு இட வேண்டுமாய் தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 


Friday, November 29, 2013

கண்ட கனவு சாதனையாய்.





அமெரிக்கா சான்பிரன்சிஸ்கோ நகரை சேர்ந்த மைல்ஸ் ஸ்காட் என்னும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனுக்கு, காமிக் ஹீரோவான 'பாட்மான்" 'BATMAN' உடன் சேர்ந்து 'கோத்தம்' நகரை காக்கும் இலட்சிய கனவு. 

அக்கனவையும் நிறைவேற்ற முன்வந்தது ஒரு அமெரிக்கத் தொண்டு நிறுவனம். அதற்காக, சேவகர்கள் பலர் தேவைப்பட்டதால், தனது இணையதளத்தில்  தகவல் வெளியிட்டது. எந்த ஒரு பண எதிர்ப்பார்ப்புமின்றி தாமாக முன்வந்து 10,000க்கும் மேற்பட்டோர், கலந்து கொள்ள முன் வந்தனர்.

'கோத்தம்'காக்குமிலட்சிய கனவை, நவம்பர் 15ம் தேதி  சான்பிரன்சிஸ்கோவை கற்பனை நகராக மாற்றி, பேட் மான்' உடையணிந்த ஒரு நடிகருடன், 'மைல்ஸ்'  சும் "பேட் மொபைல் " என்ற வாகனத்தில் சென்று சாகசங்களை நிகழ்த்தினான்.

"சபாஷ், மைல்ஸ். அப்படிதான் கோத்தம் நகரைக் காக்க வேண்டும்" என்று   அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, 'வைட் ஹவுஸ் இன்' என்ற டிவிட்டர் மூலம் பாராட்டுகளைப் பகிர்ந்துக் கொண்டார். 

நாமும் பிரார்த்திப்போம் 'மைல்ஸ் ஸ்காட், விரைவில் புற்றுநோயிலிருந்து விடுப்பட்டு, சாதனைக்குரியவனாய் திகழ. 

Thursday, November 28, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றையோருக்கும் கொல்கத்தா ரயில்வேயில் வேலை



வேலை: 1) கோல்கத்த ரயில்வே ரெக்ரூட்மெண்ட் செல் போர்ட்டர்,
                2) கலாசி 

பணியிடங்கள் : மொத்தம் 2,830. இதில் 3% அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு.                                            ஏறக்குறைய, சுமார் 84 பணியிடங்கள்.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ.

வயது வரம்பு: 18 லிருந்து 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசின்                                 வயது வரம்பு சலுகையும் பின்பற்றபடும்.
விண்ணப்பிக்கும் முறை: 1) கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் ரூபாய் 100/=க்கு  வரைவோலை (D.D ) இணைக்க வேண்டும். பிற்படுத்தபட்டோர் / ஊனமுற்றோருக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கு ) கட்டண விலக்கும்  உண்டு.

2) சுயகையோப்பமிட்ட உரிய சான்றிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டும் 

அனுப்ப வேண்டிய முகவரியும், உரையின் மேல் குறிப்பிட வேண்டியதும்:


Application for Recruitment in Pay Band-I Rs.5,200-20,200/ - with GP 
Rs.1,800/- Eastern Railway

Senior Personnel Officer (Recruitment),
Railway Recruitment Cell,
Eastern Railway,
56, C.R.Avenue,
RITES Building,
1st Floor,
KOLKATA - 700 012

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2013க்குள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு.

கூடுதல் விவரங்களுக்கு: http://www.rrcer.com 




Monday, November 25, 2013

உழைப்பின் மேன்மை.

இதை உழைப்பின் மேன்மை என்று கூறுவதா? இந்த நிலையிலும் உழைத்துதான் சாப்பிட வேண்டும் என்ற நிலைக்கு வருந்துவதா? எதுவாக இருப்பினும் ஒரு கால் இழந்த நிலையிலும், கடின வேலையில் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் இப்பெரியவரை வாழ்த்துவோம்.
  சுரண்டிப் பிழைப்பவர்களுக்கும்,  சோம்பித் திரிபவர்களுக்கும், இவரைப் போன்றவர்கள்  கொடுக்கும் சாட்டையடி. மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டும், தன்னம்பிக்கை ஊட்டும் விடிவெள்ளிகள்.