Friday, March 22, 2013

மனம் தளராத வீரப்பெண்



மூளைக்காய்ச்சல் நோய், பெரும்பாலும் குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்ற கருத்து தவறானது. குறிப்பாக இளம் பெண்களை, 14 முதல் 24 வயது உள்ளவர்களையும் பாதிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு மூளைக்காய்ச்சல் என்ன என்றே தெரிவதில்லை. இதற்காக தடுப்பூசிகளையும் அவர்கள் போட்டுக் கொள்வது கிடையாது. வைரஸ் அல்லது ஒரு வகை பாக்டிரியாக்களால் உருவாகும் மூளைக்காச்சல், மூளைப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். முதுகு தண்டுவடத்தை பாதிக்கும்.

பிரிட்டன் கேம்ப்பிரிட்ஷ் ஷயர் பகுதியில் சுட்டன் என்ற ஊரைச் சேர்ந்த, நல்ல ஆரோக்கியமான, நடனம், ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட, 16 வயது பெண், நிக்கோல் வில்சன். ஒரு நாள் கடும் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவர் நிலைமை மிகவும் மோசமானது. உடல் கொதிக்க ஆரம்பித்த்து. மூச்சு திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து கடும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. கால்களிலும்  கடும் வலி தாக்கியது. முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போனது.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுநீரக தொற்று நோயால் நிக்கோல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதி, அவருக்கு மருந்து செலுத்தப்பட்ட்து. ஆனால், அவர் இரத்த நாளங்கள் மூளைக்காய்ச்சலால் பதிக்கப்பட்டு, கை, கால்களில் எல்லாம் இரத்தக்கட்டிகள் ஏற்பட்ட பின்தான், இது  மூளைக்காய்ச்சலின் அறிகுறி எனக் மருத்துவர்கள் உறுதிபடுத்தினர். அதற்குள் அவர் மயக்க நிலைக்கு சென்று விட்டார்.
எட்டு மாதங்கள்  தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார். ஆனால் அந்த காலகட்டத்தில் இரண்டு கால்களும் வெட்டி எடுக்கப்பட்டன. கை விரல்களில் பெரும் பகுதி துண்டிக்கப்பட்டன. ஒரு கண்ணில் பார்வை பறிபோனது.


கால்களை இழந்த நிக்கோல், மனம் தளர்ந்து விடவில்லை. அவர் தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். வாரம் மூன்று முறை டயாலிசீஸ் (இரத்த சுத்தகரிப்பு) சிகிச்சை பெற்று வருகிறார். மிகவும் அபூர்வமான, ‘பி நெகட்டிவ்’ இரத்த குரூப் இவருக்கு இருப்பதால், மாற்று சிறுநீரகம் கிடைப்பது கால தாமதமாகிறது.
இரண்டு கால்களையும் இழந்து விட்டதால் பொய்க்கால் (செயற்கைக்கால்) பொருத்தி நடமாடி வருகிறார். மூளைக்காய்ச்சல் நோயிக்கு எதிரான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். “எனக்கு ஏற்பட்டுள்ள சோதனை போல் யாருக்கும் ஏற்படக்கூடாது. காய்ச்சல் என்றால் உடனே  சிகிச்சை பெற வேண்டும். நோய்களை அலட்சியப்படுத்தக் கூடாது....” என்கிறார் உடல் தளர்ந்தாலும் மனம் தளராத வீரப்பெண் நிக்கோல்.

நன்றி: காலைக்கதிர் வாரக்கதிர்.

Monday, March 18, 2013

சோதனைகளைத் தாண்டிய சாதனை



தமிழ்நாடு கோயமுத்தூர் பல்லாடம் சுல்தான்பேட்டையை சேர்ந்த சங்கர் சுப்ரமணியம். வயது 26. இவர் பிறவியிலேயே 90% சதவீத பார்வைக் குறைப்பாடுடன், இரண்டு கால்களும் வளர்ச்சியின்மையால் நடக்கவும் முடியாதவர்.
எனினும் எந்த விசயத்தையும் எளிதில் மறந்து விடாத ஞாபக சக்தியும் உள்ளவர். அதைவிட மேலாக சாதிக்க வேண்டும் என்ற திடமான உறுதியை  கொண்டவர். இதுவே சங்கர் சுப்ரமணியத்தை சாதனையாளராக மாற்றியுள்ளது. மாற்றியும் வருகிறது.
பாடப்புத்தகங்களை வாசிக்காமலேயே, பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை அப்படியே மனத்தில் பதியவைத்தே, தேர்வில் சாதித்து காட்டியுள்ளார்.



தற்போது சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.ஏ. பொருளாதாரம் பட்டப்படிப்பில் முதன்மை இட்த்தைப் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கவர்னர் ரோசையா    தங்கப்பதக்கம் வழ்ங்கி சங்கர் சுப்ரமணியத்தை கவுரவித்துள்ளார்.
“பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதே, எனது இலட்சியம்” என்கிறார் சங்கர் சுப்ரமணியம்.
மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்ற அனைவருக்கும் ஊக்கமளிக்கும் உந்து சக்தியாக விளங்கும் சங்கர் சுப்ரமணியத்தை பற்றி பதிவிடுவதில் மகிழ்வும் ஆனந்தமும், மகிழ்வும் அடைகிறோம். அவரது இலட்சியம் யாவும் வெற்றிப்[ பெறவும், செய்த, செய்ய போகும் சாதனைகளுக்காகவும் அவரை வாழ்த்துவோம்.