Wednesday, April 24, 2013

பார்வையற்ற மாணவர்களுக்கு இலவச பயிற்சி!




பார்வையற்ற மாற்றுத் திறனாளியான திரு ஜின்னா அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

நான், பார்வையற்ற மாற்றுத் திறனாளி. தேர்வு முடித்த மாணவர்கள் கோடை விடுமுறையை சிறப்பாக பயன்படுத்த சில பயிற்சி வகுப்புகளுக்கு செல்வார்கள்.

இது போன்று பார்வையற்ற மாணவர்களுக்கு  பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் வேண்டும் என்ற சிந்தனையினால், ' இந்தியன் அசோசியேசன் ஃபார் பிளைண்ட்' என்ற தொண்டு நிறுவனத்தைத் துவங்கினேன்.

இந்த நிறுவனத்தின் மூலம் 'சாதனா சிறப்பு பயிற்சி பள்ளி'யை உருவாக்கி,   பார்வையற்ற மாணவர்களுக்கு பயிற்சியளித்து, வேலை வாய்ப்புக்கான திறமையை வளர்க்கிறோம். பார்வையற்ற மாணவர்களை  கையாளத்தெரிந்த ஆசிரியரை நியமித்து, இலவசமாகவே பயிற்சி தருகிறோம்.

பார்வையற்ற மாணவர்கள் அரசுப் பணியில் சேர, முன்பு போட்டி தேர்வுகளை எழுத தேவையில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது பார்வையற்ற மாணவர்களும்  மற்றவர்களோடு போட்டி தேர்வுகளை எழுதியே பணிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

போட்டி தேர்வுகளை எழுத பயிற்சி தரும்  தனியார் பயிற்சிப் பள்ளிகளில், பிரெய்லி புத்தகங்கள், பயிற்சி உபகரணங்கள் என பார்வையற்றோருக்கு எந்த வசதியும் கிடைக்காததால், பார்வையற்ற மாணவர்களுகென தனியாக சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தேன்.

அரசுத்துறை மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பணி வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்றார் போல், ஆங்கில அறிவை வளர்க்க, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகள், 'பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், கணினி பயிற்சியென சாதாரண மனிதர்களோடு பார்வையற்ற மாணவனும் போட்டி போடும் அளவிற்கு பயிற்சி தருகிறோம்.
'யுனைட்டட் வே ஆஃப் சென்னை' என்ற நிறுவன உதவியுடன், 25 கணினிகள் வாங்கி பார்வையற்ற மாணவர்களுக்கான கணினி மையத்தையும், நடத்துகிறோம். கோடையில் நடத்தப்படும் இவ்வகுப்புகளை, இனி ஆண்டு முழுவதும் நடத்த முயற்சி எடுத்து வருகிறோம் என கூறுகிறார்.

உழைப்புக்கே பெருமை சேர்க்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான திரு.ஜின்னா அவர்களை வாழ்த்திப் போற்றுவோம்.

பயனடைய உறுதிக் கொண்டுள்ளோர், திரு.ஜின்னா அவர்களை தொடர்பு கொள்ள : 96008 22994 

கருணை உள்ளங்களுக்கு.... வேண்டுகோள்.


சிந்தனக்குறிய வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே! மாற்றுத்திறனாளியின்பரிதபத்திற்குறிய நிலையில் ஓரு வேண்டுகோள். இதோ அவரே கூறுகிறார்.

ஐயா/ அம்மா, அனைவருக்கும் வணக்கம். என்பெயர் சி.கிருஷ்ணன். தற்போது தமிழ்நாடு தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வசித்துவருகிறேன்.  நான் சிறுவனாக இருந்த போதுஇளம்பிள்ளை வாத நோயினால் [ POLIO ]பாதிக்கப்பட்டு, இடது கால் முழுமையாய் செயலிழந்து விட்டது. மேலும் ஒருவிபத்தில் இடது கை எழும்புகள் முறிந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஸ்டீல்பிளேட்டுகள் [STEEL PLATE ] பொருத்தப்பட்டுள்ள ஒரு மாற்றுத்திறனாளி நான்.

இவ்வளவு சோதனைகளுக்கு இடையிலும் M.Com., B.Ed.,PGDPR., B.A English [ Double Degree]., B.Ed. Spl.Edu in Hearing  Impairment., இப்பட்டப்படிப்புகளை வெற்றிகரமாக முடித்துள்ளேன். ஆனாலும் அரசு வேலை கிடைக்காமையால் தனியார் பள்ளியில் குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரிய பணியை புரிந்து வருகிறேன். பல துன்பங்களுக்கு இடையில் எமக்குபிறந்த இரண்டு குழந்தைகள் இறந்து விட்டன.

அத்துன்பங்களில் இருந்து மீள்வதற்குள், இடிமேல்இடியாக தற்போது எனது மனைவிக்குஇரண்டு சிறுநீரகங்களும் BOTH KIDNEY FAILURE ] செயல் இழந்து விட்டது. 3வயதில் ஒரு மகன் உள்ள இச்சூழ்நிலையில் எம் குடும்ப நிலை ஆழ்கடலில், புயலில்சிக்கிய படகைப்போல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.



இளம் வயது பெண்மணி என்பதால், என் மனைவிக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினால், சில மாதங்களுக்கு பின் நலமடைந்து வாழலாம் என மருத்துவரின் வழிகாட்டுதல்படி, கோவை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மாற்றுச் சிறுநீரகம் பொருத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

பொருளாதாரத்தில் மிகவும் ஏழ்மை நிலையிலும்,மாற்றுத்திறனாளியாக இருப்பதாலும் அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவைசிகிச்சைக்கு அதிக பட்சமாக ரூபாய் 1,50,000/= கொடுக்கிறது.  இதர தொடர் மருத்துவ சோதனைகளுக்கும், மருத்துவ பராமரிப்புக்கும் மேற்கொண்டு ரூபாய் 2,00,000/= (இரண்டு இலட்சம்) மேல் தேவைப்படும் என அறிவுறுத்தி உள்ளார்கள். நாங்கள் பொருளாதாரத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளதால் கொடையுள்ளம் கொண்ட தங்களை, தங்கள் நண்பர் திரு.தவப்புதல்வன் அவர்கள் மூலமாக அனுகியுள்ளேன். இத்துடன் எங்கள் குடும்ப புகைப்படத்தையும் இணைத்துள்ளேன். 

தாங்கள், மாற்றுத்திறனாளியான எம் மீதும், எங்கள் குடும்பத்தின் மீது கருணைக் கூர்ந்து தங்களால் இயன்ற பொருளுதவியை கீழ்கானும் எனது வங்கி கணக்கிற்கு அனுப்பி, எங்கள் குடும்பத்தை காக்கும்படி பாதம் பணிந்து, கரம்கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

Bank Account details:
Name:         C.Krishnan
SB A/c  No:997279690 (nine nine seven two seven nine six nine zero )
Bank :          IndianBank                        State :          Tamil Nadu
Branch:       Pennagaram                        District :       Dharmapuri

IFSC Code :   IDIB000P076                      MICR Code :   636019078

BranchCode :  00P076
இப்படிக்கு,
சி.கிருஷ்ணன்
Ct:00 91 978 780 8804

*கொடையுள்ளம் உள்ள நண்பர்களே, ஒரு மாற்றுத் திறனாளியின் குடும்பத்தைக் காக்க தங்களால் இயன்றபொருளுதவியை தந்து உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

·    நண்பர்களே!  உங்கள் பக்கத்தில், மீண்டும் பதிவு செய்வதுடன், தங்களால்முடிந்ததை உதவுங்கள். நண்பர்களுக்கும், சேவைஅமைப்புகளுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

        Dear Friends Please share. And help

              உங்கள்,
             தவப்புதல்வன்.
            Dhavappudhalvan.

மாற்றுத்திறனாளிகளுக்கு சேலத்தில் வாய்ப்பு



இரண்டு கைக|ளும் நல்ல நிலையில் உள்ள, செவிதிறன் குறைந்த மற்றும் வாய் பேசயியலாத மாற்றுத்திறனாளிகளுக்கு, சுயத்தொழில் புரிய உதவும் வகையில், விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், சேலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பாண்டு வழங்கப்பட உள்ளது.
தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகள் வரும் 30ம் தேதிக்குள் [2013 ஏப்ரல் 30ம் தேதிக்குள் ] சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்திள் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் நடராஜன் அறிக்கை விடுத்துள்ளார்.
·      நண்பர்களே! சேலம் மாவட்டத்தில் தெரிந்த இரண்டு கைக|ளும் நல்ல நிலையில் உள்ள, செவிதிறன் குறைந்த மற்றும் வாய் பேசயியலாத மாற்றுத்திறனாளிகள் யாரெனும் இருப்பின், அவர்களுக்கு உடன் தகவல் தந்து பயனடைய செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

சேவையில்,
தவப்புதல்வன்.

Thursday, April 11, 2013


நீங்களோ, உங்களை சார்ந்தவர்களோ ஊனமோ, உடல்நிலை பாதிப்போ ஏற்படின், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இப்படிதான் நடந்துக் கொள்வீர்களா? மனம் தொட்டு கூறுங்கள்.
மாற்றுத்திறனாளிகளின் பயணங்கள் குறித்து சிந்திக்குமா இந்தியா? (Will India implement UNCRPD?

மாற்றுத்திறனாளிகள், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்பது போன்ற செய்தி வெளியானது. மத்திய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகமானது 'மாற்றுத்திறனாளிகள் ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் கடத்துகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் சக்கர நாற்காலியில் ஆபத்தான பொருட்களை மறைத்து எடுத்துச் செல்கின்றனர்' என்று குற்றம் சாட்டுகின்றது. மாற்றுத்திறனாளிகள் அவர்களது சொந்த சக்கர நாற்காலியைப் பயன்படுத்தக் கூடாது, விமானப் போக்குவரத்து பாதுகாப்புக் கழகம் வழங்கும் சக்கர நாற்காலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதி இருக்கிறது என்று வாதிடுகின்றனர்.

அவர்களிடம் சில கேள்விகள்:

1. இதுவரை எத்தனை முறை மாற்றுத்திறனாளிகள் ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் கடத்தியுள்ளனர் என்று கூற முடியுமா?

2. கடந்த காலத்தில் எத்தனை மாற்றுத்திறனாளிகள் இவ்வகையான குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டுள்ளார்கள்?

3. சர்வதேச அளவில் எத்தனை முறை மாற்றுத்திறனாளிகள் இவ்வகையான குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகளை அளிக்க முடியுமா?

இந்த மூன்று கேள்விகளுக்குமான பதில் மாற்றுத்திறனாளிகள் மேல் குற்றம் சுமத்துபவர்களிடம் இருக்காது. தற்பொழுதுதான் மாற்றுத்திறனாளிகள் தங்களது அறிவின் துணை கொண்டு, ஆற்றலுடன் சமூக அவலங்களைத் தாண்டி உடற் குறைகளை பொருட்படுத்தாது,
உழைத்து வாழ்வில் முன்னேறி வருகின்றனர்.

அவர்களில் விமானப் பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட தற்பொழுது அதிகரித்துள்ளது என்பது உண்மை. ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மிக மிக அதிகமானது. கம்பிக் கால்களை அணிந்து கொண்டு கைகளில் கோல்களை ஊன்றிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு நடந்து விமானப் பயணம் மேற்கொள்கின்றனர்.

உலோகங்களைக் கண்டறியும் கருவிகள் இவர்கள் அருகில் வந்தாலே ஒலி எழுப்புகின்றன. பலமுறை மாற்றுத்திறனாளிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளைக் களையச் சொல்லி உள்ளாடைகளுடன் நிறுத்தும் கொடுமைகள் பாதுகாப்பு சோதனைகள் என்ற பெயரில் அரங்கேறி வருகின்றன. இவ்வகையான சோதனைகள் எல்லாம் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களுக்குக் கிடையாது.

(மத்திய அமைச்சர் ஜெயப்பால் ரெட்டி அவர்களை இவ்வாறு சோதனை செய்ய முற்படுமா மத்திய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம்?) மாற்றுத்திறனாளிகளின் தன்மானத்திற்கு எதிரான இவ்வாறான போக்குகள் அவர்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கின்றன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் எனது நெருங்கிய தோழர் ஒருவருடன் பயணம் செய்த மாற்றுத்திறனாளி ஒருவரை மத்திய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழக அதிகாரிகள் உள்ளாடைகளுடன் நிறுத்தி சோதனை செய்ததைக் கூறி மிகவும் வருத்தப்பட்டார். தனது வாழ்நாளில் தான் மிகவும் கொதித்து கோபப்பட்டு அந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறினார். மாற்றுத்திறனாளிகள் பல இடஙகளில் இது போன்று அதிகார வர்கத்தினரால் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த பிப்ரவரி 20-ம் தேதி கொல்கத்தாவில் ஜீஜா கோக் என்ற மாற்றுத்திறனாளி ஆசிரியையை ஸ்பைஸ் ஜெட் என்ற தனியார் நிறுவன விமான ஓட்டி, விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்துவிட்டார். இவர்களைப் போன்றவர்கள் விமானத்தில் பயணம் செய்யத் தகுதியற்றவர்கள் என்று கூறி அந்த ஆசிரியையை இறக்கிவிட்டுவிட்டார். அந்த ஆசிரியை பலமுறை உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்பவர். ஆனாலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது போன்றே சென்னையைச் சேர்ந்த டாக்டர்.தீபக் என்பவரை சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்ற மறுத்த செய்தி சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. தொடர்ந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக இவ்வாறான செய்திகள் மாற்றுத்திறனாளிகள் சந்தித்து வரும் பிரச்சினைகளை வெளிக் கொணர்வதாக இருக்கின்றது. மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கப்படுகிறார்கள், அவர்களின் சமூக வாழ்வுரிமைகள் அதிகார வர்க்கத்தினரால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

எனது தோழர் ஒருவர் கூறிய ஒரு சம்பவம். மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவருக்கு விமானத்தின் பின் பகுதியில் (வால் பகுதியில்) 29சி என்ற எண் கொண்ட இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. (விமானத்தின் வால் பகுதியில் சிவப்பு நிறத்தில் இருக்கைகள் குறிக்கப்பட்டுள்ளது) பல பெரிய விமானங்களில் முன்புறமும் பின்புறமும் ஏணிகள் இணைக்கப்பட்டு விமானத்தினுள் பயணிகள் ஏறும்விதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த விமானமானது, பயணிகளை விமானப் பாலத்தின் ஊடாக ஏற்றவும் இறக்கவும் வழி வகை செய்யப்பட்டிருந்தது. அவ்வாறாக விமானத்தின் முன்புறத்தை பாலத்துடன் இணைத்து பயணிகளை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

இரண்டு கால்களும் செயல் இழந்த அந்தப் பெண் ஊன்றுகோல்களின் உதவியுடன் விமானத்திற்குள் மிகுந்த சிரமத்திற்கு இடையில் சென்றால் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் இருக்கையானது விமானத்தின் மறுகோடியில் உள்ளது. மிகவும் குறுகலான அந்த இடைவெளியில் தனது ஊன்று கோல்களுடன் அந்தப் பெண் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அந்த இடத்தை அடைவது என்பது மிகவும் கடினமானது. எனது தோழர் விமான அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.

விமானப் போக்குவரத்து நிர்வாகத்தினர் மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த இருக்கைதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது- நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்று கூறியிருக்கின்றனர். அவ்வாறான இருக்கையை அடைவதற்கு அவருக்கு ஏணி வசதிகள், அல்லது லிப்ட் வசதி செய்து தரப்பட்டிருந்தால் மட்டுமே அவர் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 29சி என்ற இருக்கையை அடைய முடியும். அவ்வாறு நீங்கள் செய்து தரவில்லை, எனவே விமானத்தின் முன் இருக்கையை அவருக்கு ஒதுக்கிக் கொடுங்கள் என்று பலவிதங்களில் எடுத்துக் கூறி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளியின் உரிமைக்குப் போராடும் தோழரின் கடுமையான வாக்குவாதங்களால் வேறு வழியில்லாமல் இடம் ஒதுக்கித் தரப்பட்டது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

அவ்வாறான ஒரு போராட்டம் இல்லையென்றால் அந்த மாற்றுத்திறனாளிப் பெண் அனுபவித்திருக்கும் கொடுமைகளுக்கு யாராலும், எந்த வார்த்தைகளாலும் ஆறுதல் சொல்ல இயலாது.
சென்னையைச் சேர்ந்த திரு.தீபக் அவர்கள் அமெரிக்கா சென்ற பொழுது அவர் இரண்டு ஊன்றுகோல்களுடன் விமானத்தில் இருந்து எழுந்தவுடன் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறப்பு மின் தூக்கி உதவியுடன் அவர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டார். அவர் நான்கு சக்கர வாகனத்தில் ஏறி விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதுவரை விமான நிலைய ஊழியர்கள் உதவினார்கள் என்பதை ஒரு முறை நினைவு கூர்ந்தார். அனைத்து விஷயங்களுக்கும் அமெரிக்காவை அடியொற்றி நடக்கும் இந்திய நாடும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மனித உரிமையாகக் கருதி பணியாற்றிடலாமே.

1986-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் அவர்கள் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார் (U.S. Air Carrier Access Act 1986) அச்சட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் சந்தித்துவந்த அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்தன. இது போன்ற ஒரு சட்டத்தை இந்திய அரசால் நிறைவேற்ற இயலாதா?

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் United Nations Convention on Rights of Persons with Disabilities (U.N.C.R.P.D.) அக்டோபர் 1-ம் தேதி 2007-ம் ஆண்டு கைச்சாத்திட்டது. அத்துடன் அதை மறந்தும் போய்விட்டது. சின்னஞ் சிறிய நாடான மலேசியா மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தத்தக்க வகையில் தனது விமான நிலையங்களையும், விமானத்தில் பயணிகள் பயன்படுத்தும் பாதையையும், சிறப்பு மின் தூக்கிகளையும் பயன்படுத்தி வருகிறது.

இவ்வாறான நடவடிக்கையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் எவ்விதமான சிரமங்களும் இன்றி விமானங்களில் பயணித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளின் மக்கள் தொகையில் உலகில் முதல் நாடான இந்தியா அவர்களைப் பற்றி எப்பொழுது சிந்திக்கும்? எமது பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்காது மாற்றுத்திறனாளிகள் ஆயுதங்கள் கடத்துகின்றனர், வெடிப் பொருட்களை அவர்களது சக்கர நாற்காலிகளினூடாக கடத்துகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பது வேதனையாக இருக்கின்றது.

நன்றி: கீற்று


http://www.facebook.com/photo.php?fbid=550658218307133&set=a.198320656874226.47263.100000888786399&type=1&theater

Wednesday, April 10, 2013

மாற்றுத்திறனாளிப் பெண்ணை எட்டி உதைத்தது


மாற்றுத்திறனாளிப் பெண்ணை எட்டி உதைத்தது, சென்னை தண்டையார்பேட்டை காவல்துறை ( செய்தி:  GTV News April 19th-10pm) ஜீடிவி செய்தி (ஏப்ரல் 19 ந் தேதி  - இரவு 10 மணி செய்தியில்)

* குற்றம் எதுவாக இருப்பினும், ஒரு பெண்ணை, அதுவும் மாற்றுத்திறனாளிப் பெண்ணை எட்டி உதைத்ததற்கு, தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகளின் சார்பில் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொடூரக் குற்றவாளிகளுக்கும் பிரியாணி விருந்திட்டு பாதுகாக்கும் காவல்துறை (இது உதாரணத்துக்குதான்.  எதுவாக இருப்பினும் தவறு என சுட்டிக் காட்டதான்). மாற்றுத்திறனாளிப் பெண், குற்றமே புரிந்திருந்தாலும் கூட முறைப்படி (சொல்லவே கூடாது. இவர்கள் முறையே தனி தான்) விசாரிப்பதை விடுத்து, இப்படி அராஜக செயலாக நடந்துக் கொண்டிருப்பது, காவல் துறைக்கு அழகும் அல்ல. கண்ணியமும் அல்ல.

* காவல்துறைக்கு, உங்கள் வீட்டு அல்லது உங்களுக்கு தெரிந்த நல்ல நிலையில் உள்ள ஒரு பெண்ணை, இப்படி நடத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா?

* நீதிமன்றத்திற்கு: தன்னிச்சை நடவடிக்கையாக, நீதிமன்றமே வழக்கை எடுத்து, அவமானப்படுத்தப்பட்ட, பெண்ணை, அதுவும் மாற்றுத்திறனாளிப் பெண்ணை எட்டி உதைத்ததற்கு தக்க பரிகாரம் வழங்க வேண்டும். அவமானப்படுத்த பட்டதற்கு நஷ்ட ஈடாக, அந்த செயலில் ஈடுபட்ட காவலர்களிடமும், தமிழக அரசிடமும் இருந்து ஒரு பெருந்தொகை, பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு  கிடைக்க  உத்தரவு இட வேண்டும்.
மக்களின் நண்பன் என கூறும் காவல்துறையின் இச்செயல்பாட்டிற்கு,  நீதி மன்றம் வழங்கும் உத்தரவு, தக்கதொரு அறிவுரையாக அமைய வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் உணர்வாகும்.

* ஒரு கண்ணியமிக்க பெண் முதல்வரின் ஆட்சிக்கு, இதுபோன்ற செயல்கள் களங்கமே ஏற்படுத்தும் என்பது நிதர்சனமாகும்.  

**** வணக்கம் நண்பர்களே! விருப்பக்குறி மட்டும் போட்டு விடாமல், கருத்துக்களை (தமிழ், இங்க்லீஷ், தங்க்லீஷ்) பதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தங்கள் பக்கங்களில் மறுபதிவிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு  ஆதரவளித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். 

Friday, April 5, 2013

தெரிந்துக் கொள்ளுங்கள்....



2013 ஏப்ரல் 3ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில், சத்துணவு மற்றும் சமுக நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காகவும் சில புதிய அறிவுப்புகளை சத்துணவு மற்றும் சமுக நலத்துறை மாநில அமைச்சர் வளர்மதி கீழ்கண்டவாறு அறிவித்தார்.
1)      மாற்றுத்திறனாளிகளில், கல்லூரி மாணவர்களுக்கும், சுயத்தொழில் புரிவோருக்கும், மட்டுமே பெற்றோல் இஞ்ஜின் பொருத்திய ‘ஸ்கூட்டர்’ வழங்கப்படுகிறது. ( ** இது, சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. எனவே சட்ட மன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட சமுக நலத்துறையின் மூலமாக விண்ணப்பித்து பெறலாம்)  
2)      .ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்க ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
3)      படித்த இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட்த்தின் கீழ் 15 சதவீத மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் பங்காக, 5 சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது. இனி **மாற்றுத்திறனாளிகள் செலுத்த வேண்டிய, ஐந்து சதவீத்த் தொகையை, அரசே ஏற்று வழங்க 50ம் இலட்ச ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்படும்.
4)      மாற்றுத்திறனாளிகள் சிறு மற்றும் குறுந்தொழில், சுயவேலை வாய்ப்பு வங்கி கடன் திட்டத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் மானியம், 5,000 ரூபாய், இனி 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
5)      செவித்திறன் குறையுடையோருக்கான ஆரம்ப நிலை மண்டல பரிசோதனை மையங்கள், 10 மாவட்டங்களில் 1.98 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
6)      மாற்றுதிறனாளிகளுக்கான 23 அரசு சிறப்பு பள்ளிகளில் பயலும் மாணவ, மாணவியரின் நலனுக்காக 18 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில்  சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்படும்.
7)      கோவில்களில் மாற்றுத்திறனாளிகளிடம் மனிதநேயத்துடன் நடந்து, மூன்று சக்கர வாகனத்தில்!!!!!!! [மூன்று சக்கர வாகனமா/ சக்கர நாற்காலியா?] வைத்து மூலஸ்தானத்தில் ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக அரசு ஏற்பாடு செய்யுமென்றும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது எனவும் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.
8)      மாற்றுதிறனாளி குழந்தைகள் மையத்திலும் மதிய உணவு என தலைப்பு செய்தி உள்ளது. ஆனால் அது பற்றி விபரம் இல்லை.

வேண்டுகோள்:
*சக்கர நாற்காலிகளை பழுதின்றி பராமரிக்க வேண்டும்.
*கட்டணம் வசூலிக்கக் கூடாது.
*உதவுகிறேன் என்ற பெயரில், ஆலய பணியாளர்களோ, தனி நபர்களோ  பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்க கூடாது.

**திருபதி திருமலை தேவஸ்தானத்தில் மாற்றுத்திறனாளிகளிடமும், முதியோர்களிடமும் நடந்துக் கொள்ளும் பண்பை கண்டு உணர்ந்து கொள்வதுடன், கருத்தில், மனத்தில் நிறுத்தி செயல்பட வேண்டும்

செய்தி: காலைக்கதிர் சேலம். 04/04/2013.

Thursday, April 4, 2013

கூட்டுறவு தேர்தலில் மாற்றுத்திறனாளி மனு நிராகரிப்பு. கோர்ட்டுக்கு செல்ல முடிவு.

கூட்டுறவு தேர்தலில் மாற்றுத்திறனாளி மனு நிராகரிப்பு. கோர்ட்டுக்கு செல்ல முடிவு.

தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில், தருமபுரி மாவட்டத்தில் பொது நூலகத்துறை கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் 2008ம் ஆண்டு இயக்குனராக செயல்பட்ட பிளஸ் 2 படித்த  மாற்றுத் திறனாளியை தமிழ் மற்றும் ஆங்கிலம் படிக்கத் தெரியாதென , வேட்பு மனுவை நிராகரித்து இருக்கிறார்கள்.   


தருமபுரி மாவட்ட பொது நூலகத்தில், நூல் கட்டுனராக பார்வையற்ற மாற்றுத்திறனாளி  சரவணன் , நிரந்தர ஊழியராக பணி புரிந்து வருகிறார்.
இவர் பொது நூலகத்துறை கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் 20 ஆண்டாக உறுப்பினராக இருந்து வருகிறார்.28 (எ) 29ம் தேதி பொது நூலகத்துறை கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் இயக்குனர் பதவிக்காக, நல்லம்பள்ளி பகுதி தேர்தல் அலுவலர் லோகநாதனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

                             

வேட்பு மனு பரிசீலனையின் பொது, சரவணனின் மனு நிராகரிக்கப்பட்டது. இது கூரித்து தேர்தல் அலுவலர் கூறுகையில், "கூட்டுறவு சங்க விதிமுறைப்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தவர் மட்டும் போட்டியிட முடியும். இதன் அடிப்படையில் பார்வையற்ற சரவணன் மனு நிராகரிக்கபடுள்ளது," என்றார்.

இது குறித்து சரவணன் கூறியதாவது,, நான் பொது நூலகத்துறை கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் 2008ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு, இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். தேர்தல் விதிமுறையில் பார்வையற்ற மாற்றுத்திரனாளிகள் போட்டியிட முடியாதென குறிப்பிடப் படவில்லை.
பார்வையற்ற நான் பிளாஷ் 2 தேர்ச்சிப் பெற்றுள்ளேன். எனக்கும் மற்றவர்கள் படித்துக் காட்டுவதுன்மூலம் புரியும் சக்தி உண்டு. படிக்கத் தெரியாதவன் என கூறி ன் மனு நிராகரிக்கப் பட்டுள்ளது, வேஷனை அளிக்கிறது.
கூட்டுறவு சங்க தேர்தலில் எதிர்காலத்தில் பார்வையற்ற மாற்றுத்திரனாளிகள் போட்டியிட முடியாதென நிராகரிக்கக் கூடாது. இதற்காக நீதி மன்றத்திற்கு செல்ல உள்ளேன் என கூறியுள்ளார்.


*** அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஆட்டுவிக்கும் ஆட்டத்திற்கு அளவேயில்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு விசயத்திற்கும், நீதிமன்றத்தை நாடித்தான் தீர்வுப் பெற முடியுமென  செய்வது, செயல்படுவது  தகுமா? 



செய்தி: காலைக்கதிர் நாளிதழ். 31/03/2013

.

Wednesday, April 3, 2013

கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை


ரசிகவ் ஞானியார்



எனது பெயர் Nick Vujicic . என்னை படைத்த இறைவனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னை மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாக படைத்ததற்காக நான் பெருமைப்படுகின்றேன்.

Nickஇப்படி யாராவது சொல்லக்கூடுமா..? சொல்லக்கூடும் இறைவன் தனக்கு வளமான வாழ்வு கொடுத்து - நல்ல உடலமைப்பு கொடுத்திருந்தால்.ஆனால் பாருங்களேன் இந்த மனிதரை.


கைகள் மற்றும் கால்களின் பகுதிகள் எதுவும் இல்லாமல் பிறந்தாலும் இந்தக்குறை இறைவன் என் மீது அன்பு வைத்திருப்பதால்தான் என்று கூறுகின்றார். நாம் ஏதாவது சின்ன பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டால் கூட "அய்யோ எனக்கு மட்டும் இறைவன் இப்படி பண்ணிவிட்டானே" .."அப்படி பண்ணிவிட்டானே" என்று இறைவனை திட்டி தீர்த்துவிடுவோம்.

சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் மனம் தளர்ந்து ஒடிந்து போய் இருப்பவர்களுக்கெல்லாம் இந்த மனிதர் தன்னம்பிக்கை தருகின்ற பாடமாக இருக்கின்றார்.

தனது பிறப்பினை இத்தனை பேருக்கு சாட்சியாக - மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படி வைத்த இறைவன் தன்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கின்றான் என்று சொல்லும் அளவிற்கு பக்குவப்பட்டிருக்கும் மனிதர் இவர்

சமீபத்தில் கூட நான் பார்த்த டிஷ்யும் என்ற படத்தின் வசனத்தில்; உயரம் குறைவாக உள்ள மலையாள நடிகர் பற்றிய ஒரு காட்சி :அந்த உயரம் குறைவான நடிகரின் கதாபாத்திரம் காணுகின்றவர்களிடமெல்லாம் கடன் வாங்குவார் ஒரு தடவை சிறுவர்களிடம் கடன் வாங்கி விட அந்தச்சிறுவனின் தந்தை வந்து அவரைத்திட்ட இதனைக்கண்ட கதாநாயகன்

"ஏண்டா இப்படி அவமானப்படுத்துற..சின்னப்பையன்களையெல்லாம் ஏண்டா ஏமாத்துற..ச்சே எனக்கு வெட்கமா இருக்குடா" என்று கடிந்து கொள்வதைப் பார்த்து அவர் ஒரு வசனம் சொல்லுவார் "டேய் ..நான் செய்வது தப்புதாண்டா..ஆனா நான் வெளியில் சென்றால் என் உருவத்தைக் கண்டு கிண்டல் செய்கின்றார்கள். அவர்கள் என்னை கிண்டல் செய்வதைத்தடுக்கத்தான் இந்த கடன் வாங்கும் முயற்சி.."

"என்னைக் கண்டு கிண்டலடிப்பவர்கள் எல்லாம் அய்யோ இவன் வந்தால் கடன் கேட்பான் என்று ஓடி ஒளிவதைக்கண்டு எனக்குள் ஒரு சந்தோஷம்..என்னை யாரும் கிண்டலடிக்க மாட்டார்கள் அல்லவா..

தப்பு செய்யாத மனுசனே இல்லைடா..ஏன் கடவுளே தப்பு செய்திருக்கான்..பின்னே என்னை இப்படி படைச்சது அவனோட தப்புதானே..?" என்று சொல்லிவிட்டும் செல்லும் காட்சி மனசை உருக்குகின்ற காட்சி. இப்படி எல்லா மனிதர்களுமே தவறை கடவுள் மீது போட்டுவிடுவார்கள்.

தன்னை மட்டும் கடவுள் குறைகளோடு படைத்துவிட்டானே என்று இவரைப்போன்று குள்ளமாகப் பிறந்ததற்கு அல்லது உடல் ஊனமாய் பிறந்ததற்கு வருத்தப்படுபவர்களுக்கு மத்தியில் பாதி உடலே இல்லாமல் பிறந்தாலும் இதயம் முழுமையடைந்துப் பேசும் இவரை கண்டால் அதிசயமாகத்தான் இருக்கின்றது.

உங்களுக்கு எத்தனை துன்பங்கள் அல்லது போராட்டங்கள் வந்தாலும் அதனை மறந்து விட்டு மகிழ்ச்சியாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் இவரின் பிரச்சாரம். 1982 ம் மாதம் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்தார் அவர். இவருடைய தந்தை ஒரு சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிபவர் .
with friends

கை - கால்கள் இல்லாமல் பிறந்த தங்களுடைய முதல் குழந்தையைக் கண்டு அதிரிச்சியுறற பெற்றோர்கள் பின்பு நிதானமாய் சொல்லியிருக்கின்றார்கள்; "கடவுளை வேண்டிக்கொள்வோம்" என்று .

மருத்துவர்கள் கூட இதற்கு மாற்று வழிதெரியாமல் திகைத்துப்போய் நின்று விட்டனர். இதற்கு மருத்துவ ரீதியாக காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

ஆனால் தற்பொழுது நிக்கிற்கு ஒரு தங்கையும் தம்பியும் நல்ல உடல் ஆரோக்கியத்தில் மற்ற குழந்தைகள் போல பிறந்திருக்கின்றார்கள்.

நிக்கின் குறைபாடுகளைக் கண்டு இவர் பிறந்தவுடன் இவருடைய தந்தைக்கு அனைவரும் துக்கம் சொல்ல வந்துவிட்டார்கள். அனைவருமே ஆதங்கப்பட ஆரம்பித்து விட்டார்கள் "அன்பின் உருவமாக - அன்பின் கடவுளாக இருக்கும் இறைவன் - இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தையை ஏன் இந்த அளவிற்கு மதப்பற்றுள்ள அவனையே நாள்முழுவதும் துதிக்கின்ற ஒரு பாதிரியாருக்கு கொடுக்க வேண்டும் என்று.

இப்படி கை - கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை சீக்கிரத்தில் இறந்து விடும் என்றுதான் அவருடைய தந்தை நினைத்திருக்கின்றார்.ஆனால் நிக் உடல் குறைபாடே தவிர ஆரோக்கியமான குழந்தையாகதான் இருந்தார்.

"என்னுடைய பெற்றோர்கள் முதலில் அதிர்ச்சியுற்று எனக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் அமையுமோ என்று பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இறைவன் அவர்களுக்கு மன - உடல் வலிமையைக் கொடுத்து தைரியத்தையும் கொடுத்திருக்கின்றான்." என்று கூறுகின்றார்.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் கை- கால்கள் இல்லாமல் அவரும் அவரின் சுய தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவருடைய பெற்றோர்களும் அவரும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று.குழந்தைகள் என்றால் நாம் அதன் கையைப்பிடித்து அதன் மிருதுவான விரல்களை பிடித்து தடவுவோம். அதன் பிஞ்சு விரல்களை எடுத்து நம் கன்னத்தில் வைப்போம்.

அந்தக் குழந்தையும் நம்முடைய பெரிய கண்களை - மூக்கினை - வாயினை கண்டு ஆச்சர்யப்பட்டு தனது பிஞ்சு விரல்களால் நோண்டி நமக்கு இன்ப வேதனையைக் கொடுக்கும்.
குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் அந்த தத்தல்களின் முதன்நடைக்காக எத்தனை பெற்றோர்கள் ஏங்கியிருப்பார்கள். அதனைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

அட எம்பையன் நடக்க ஆரம்பிச்சுட்டான் பாரு..வா..வா..வாடா..என்று தூரத்தில் அவனை நிற்கவைத்து அவனை தன் பக்கம் வரச்சொல்லி, அவன் தத்தி..த..த்..தி நடந்து நெருங்கும்பொழுது கீழே விழுந்து விடுவானோ என்ற ஆர்வ மிகுதியில் தாய் அவனைப் பாதி தூரத்திலையே பிடித்து அணைத்துக்கொண்டு எம் பையன் நடக்க ஆரம்பிச்சுட்டான்..ஆரம்பிட்டான் என்று செல்லமாய் குதூகலிப்பார்களே..?

அதுபோன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் கொடுத்து வைக்காத பெற்றோர்களாக அவர்கள் போய்விட்டாலும் மனம் தளர்ந்து போகாமல் நிக்கை படிக்க வைத்திருக்கின்றனர்..
அதற்கும் அவர்கள் போராட வேண்டியதிருக்கின்றது. நிக் பள்ளிக்கு செல்லுகின்ற பருவம் வந்ததும் Main Stream பள்ளியில் சேர்ப்பதற்காக முயன்றபொழுது ஆஸ்திரேலிய நாட்டின் சட்டப்படி உடல் ஊனமுற்ற குழந்தையினை சேர்க்க அந்தப்பள்ளி மறுத்துவிட அவனது தாய் அந்த நாட்டின் சட்டத்திற்கு எதிராக போராடி நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி நாட்டின் சட்டத்தை மாற்ற வைத்து நிக்கை பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். அந்தப்பள்ளியில் படிக்கின்ற முதல் ஊனமுற்ற மாணவன் நிக் மட்டுமே..

பாருங்களேன் நிக்கின் தெளிவான பக்குவப்பட்ட உரையினை :

"இப்படி போராடுவதற்கான முயற்சிகளை இறைவன் எனது தாய்க்கு தந்ததற்காக நான் இறைவனுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

முதலில் நான் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளானேன். என்னால் மற்ற மாணவர்கள் போல இருக்க முடியவில்லை. நான் மற்றவர்களால் வெறுக்கப்பட்டு, ஒரு விநோத பிராணியைப்போல பார்க்கப்பட்டு, மூன்றாம் தரமாய் நடத்தப்பட்டு உடன் படிக்கின்ற மாணவர்களால் கேலி , கிண்டலுக்கு உள்ளானேன். அப்பொழுதெல்லாம் எனது பெற்றோர்கள் தந்த ஊக்கமும் ஆதரவும்தான் எனக்கு ஆறுதலாய் இருந்தது

சில சமயங்களில் சக மாணவர்களின் அதிகமான கேலி , கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் இருந்தபொழுது எனது பெற்றோர்கள்தான் என்னைச் சமாதானப்படுத்தி மற்ற மாணவர்களோடு நண்பர்களாக உன்னை மாற்ற முயற்சி செய்யச் சொன்னார்கள் .

நானும் அவர்களுடன் கிண்டலாக பேசிக்கொண்டும் சில வேடிக்கையான செயல்களை அவர்களுக்கு முன்னால் செய்து காட்டி அவர்களை சிரிக்க வைத்து கலகலப்பு ஊட்ட ஆரம்பிக்க. நானும் அவர்களைப்போன்ற உணர்வுகள் உள்ளவன்தான் என்று அவர்களும் நாளடைவில் உணர ஆரம்பித்தார்கள்.


Speechஇறைவனின் அருளால் என்னைச் சுற்றி புதிய புதிய நண்பர்கள் நல்ல நட்போடு பழக ஆரம்பித்தார்கள்.

எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று யாரையும் இதற்கு குற்றம் சொல்ல முடியவில்லையே என்ற வேதனையில் நாட்கள் செல்ல ஆரம்பிக்க எனக்கே என்மீது வெறுப்பு ஆரம்பித்தது கோபம் வர ஆரம்பித்தது . சண்டே பள்ளியில் சேர்ந்த பிறகு நான் கற்றுக்கொண்ட விசயம் கடவுள் எல்லாரையும் விரும்புகின்றான் ஆனால் என்மீது மிகுந்த அக்கறையாக உள்ளான் என்று.

ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. இறைவன் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்றால் ஏன் என்னை இப்படி படைக்க வேண்டும் ?. நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? என்று கேட்டுக்கொண்டே சில சமயம் என்னுடைய வாழ்க்கையையே முடித்துக்கொள்ள தீர்மானித்தேன். ஆனால் என்னுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு வாழவேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

சுற்றியுள்ளவர்களின் வார்த்தை பிரயோகங்களிலிருந்தும் முகச்சுளிப்புகளிலிருந்தும் வித்தியாசமான பார்வைகளின் கொடுரங்களிலிருந்தும் தனிமையில் கழித்த பொழுதுகளிலிருந்தும் வாழ்க்கையில் போராடுவதறகான அனுபவங்களை பெற்றுக்கொண்டேன்.

இறைவன் எனக்குண்டான இந்த குறைபாடுகளிலிருந்து மற்றவர்கள் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட கவலையில் மூழ்கி விழுந்து விடக்கூடாது . ஏதாவது ஒரு வகையில் சோகங்களை கொடுத்து ஏதாவது ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுப்பான் இறைவன்.

உங்களுக்கு இதனை உணர்த்தவே என்னைத்தேர்ந்தெடுத்துள்ளான் இறைவன்.
எனக்கு தற்பொழுது 21 வயதாகிறது . நான் Bachelor of Commerce majoring in Financial Planning and Accounting முடித்துள்ளேன். எனக்கு இறைவன் பேச்சுக்கலையை கொடுத்திருக்கின்றான்.
அதன் மூலம் எல்லா இடங்களுக்கும் சென்று என்னுடைய கதையை மற்றவர்களுக்கு சொல்லி சின்னச் சின்ன சோகங்களில் மூழ்கிக்கிடப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்போகின்றேன்.

எனக்கு நிறைய சாதிக்க வேண்டும் என்ற கணவுகளும் லட்சியங்களும் இருக்கின்றது. நான் கடவுளின் அன்பைப்பெற்றவன் என்று மற்றவர்களுக்கு சாட்சியாக இருக்கின்றேன் என்பதில் பெருமை.என்னுடைய கதையை நான் புத்தகமாக வெளியிடப்போகின்றேன். அதன் தலைப்பு
கைகள் இல்லை. கால்கள் இல்லை. கவலையும் இல்லை..

"No Arms, No Legs, No Worries!"