Wednesday, April 24, 2013

பார்வையற்ற மாணவர்களுக்கு இலவச பயிற்சி!




பார்வையற்ற மாற்றுத் திறனாளியான திரு ஜின்னா அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

நான், பார்வையற்ற மாற்றுத் திறனாளி. தேர்வு முடித்த மாணவர்கள் கோடை விடுமுறையை சிறப்பாக பயன்படுத்த சில பயிற்சி வகுப்புகளுக்கு செல்வார்கள்.

இது போன்று பார்வையற்ற மாணவர்களுக்கு  பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் வேண்டும் என்ற சிந்தனையினால், ' இந்தியன் அசோசியேசன் ஃபார் பிளைண்ட்' என்ற தொண்டு நிறுவனத்தைத் துவங்கினேன்.

இந்த நிறுவனத்தின் மூலம் 'சாதனா சிறப்பு பயிற்சி பள்ளி'யை உருவாக்கி,   பார்வையற்ற மாணவர்களுக்கு பயிற்சியளித்து, வேலை வாய்ப்புக்கான திறமையை வளர்க்கிறோம். பார்வையற்ற மாணவர்களை  கையாளத்தெரிந்த ஆசிரியரை நியமித்து, இலவசமாகவே பயிற்சி தருகிறோம்.

பார்வையற்ற மாணவர்கள் அரசுப் பணியில் சேர, முன்பு போட்டி தேர்வுகளை எழுத தேவையில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது பார்வையற்ற மாணவர்களும்  மற்றவர்களோடு போட்டி தேர்வுகளை எழுதியே பணிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

போட்டி தேர்வுகளை எழுத பயிற்சி தரும்  தனியார் பயிற்சிப் பள்ளிகளில், பிரெய்லி புத்தகங்கள், பயிற்சி உபகரணங்கள் என பார்வையற்றோருக்கு எந்த வசதியும் கிடைக்காததால், பார்வையற்ற மாணவர்களுகென தனியாக சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தேன்.

அரசுத்துறை மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பணி வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்றார் போல், ஆங்கில அறிவை வளர்க்க, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகள், 'பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், கணினி பயிற்சியென சாதாரண மனிதர்களோடு பார்வையற்ற மாணவனும் போட்டி போடும் அளவிற்கு பயிற்சி தருகிறோம்.
'யுனைட்டட் வே ஆஃப் சென்னை' என்ற நிறுவன உதவியுடன், 25 கணினிகள் வாங்கி பார்வையற்ற மாணவர்களுக்கான கணினி மையத்தையும், நடத்துகிறோம். கோடையில் நடத்தப்படும் இவ்வகுப்புகளை, இனி ஆண்டு முழுவதும் நடத்த முயற்சி எடுத்து வருகிறோம் என கூறுகிறார்.

உழைப்புக்கே பெருமை சேர்க்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான திரு.ஜின்னா அவர்களை வாழ்த்திப் போற்றுவோம்.

பயனடைய உறுதிக் கொண்டுள்ளோர், திரு.ஜின்னா அவர்களை தொடர்பு கொள்ள : 96008 22994 

No comments: