Thursday, November 13, 2014

தவறாமல் படிக்கவும்...


‪#‎பகிரவும்‬ தோழர்களே
ஏழை எளியோருக்கு ஒரு அறிய வாய்ப்பு..
விபத்தில் கால் இழந்தோர்க்கு வேண்டுகொள் ..
யாரேனும் கால்
இல்லாமல்
இருந்தால் என்னிடம்
சொல்லுங்கள்
அவர்களுக்கு ‪#‎இலவசமாக‬
மாற்றுக்கால் பொருத்திக்
கொடுக்கின்றேன்.
நண்பர்களே உங்களுக்கு
தெரிந்த
கால் இல்லாதோர்
யார் வேண்டுமானாலும் கால்
இழந்தவர்களுக்கு
மாற்றுக் கால்
பொறுத்த என்னை
தொடர்புகொள்ளுங்கள் .
மகேந்திரன்
தகவல் கொடுப்பது ...
" தீமைக்கும் நன்மை செய் "
தொடர்புகொள்ளுங்கள் ...
( ஈரம் மகி )
9080131500

நன்றி: உடல் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளி மட்டும் ( முகநூல் குழு )
              Lokesh Monk
              October 2 2014 · Chennai


புகைப்பட உதவி: http://www.metromurasu.com/

Monday, November 3, 2014

மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கை தலைவர். டிஏபி.வரதகுட்டி. Tap Varadakutti



மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கை  தலைவர். 
டிஏபி.வரதகுட்டி. Tap Varadakutti 

மாற்றுத் திறனாளிகள் சங்கத்துடனான எமது தொடர்பு 1984ல் 

தொடங்கியதிலிருந்து அறிமுகமான 

அருமை நண்பரும், தோழரும் ஆவார்.

தன்னம்பிக்கைக்கு ஒரு மணி - நண்பர் வைரமணி - Vaira Mani


நண்பர் வைரமணி - Vaira Mani

தன்னம்பிக்கைக்கு ஒரு மணி, நண்பர் வைரமணி. 
எமது சங்கத் தொடர்புகளால் அறிமுகமான அருமை நண்பர்.  கே.கே.நகரில் அவர் இருந்ததால், 
 எங்கள் குடும்பம் அங்கு குடியேறியபோது ,
எங்கள் சந்திப்பும், நட்பும், 
சங்க செயல்பாடுகளும் மேலும் வலுவடைந்தது. 

# ஜூலை 6, 2014 தேதியிட்ட சென்னை  தினகரன் நாளிதழில் 

Friday, October 24, 2014

மாற்றுத்திறனாளிகள் - கல்வி உதவித்தொகை


அகில இந்திய தொழிற் கல்வி கவுன்சிலின் 2014-15ம் கல்வி ஆண்டில் 
முதலாமாண்டு டிப்ளமோ அல்லது பி.இ. படித்து வரும் 
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கும் 
கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
*30/10/2014க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

‪#‎நண்பர்கள்‬ தங்கள் பக்கங்களிலும் பகிர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களும் பயனடைய செய்ய கேட்டுக் கொள்கிறேன்

Tuesday, September 16, 2014

நானே எனக்கு வழியானேன்...




ரமேஷ் குமார்,

பிறந்தது முதலே நடக்கமுடியாத ஒருவர், மற்றவர் சிரமமின்றி நடப்பதற்கான காலணி கடை வைத்து நியாயமான விலையில் விற்பது மட்டுமல்லாமல் யாரையும் சார்ந்திராமல் , யாருக்கும் பாராமாக இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
கோவையைச் சேர்ந்த அவர் பெயர் ரமேஷ் குமார், வயது 34.வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் பிறந்த செல்ல மகன்.
பிறவியிலேயே இவருக்கு காலில் குறைபாடு உண்டு. ஆனால் அந்த குறை தெரியாதபடி பாசம் காட்டி வளர்த்தனர்.
படிக்கப்போன இடத்தில் கேலி கிண்டல் எழவே பள்ளிக்கூடம் போவதை விட்டு விட்டார், பரவாயில்லை என்று குடும்பத்தில் உள்ளவர்களே பாடம் எடுத்தனர். இதனால் தமிழ், கணிதம் ஆகியவை நன்றாக வரும்.
முதல் இடி; முதல் தவிப்பு:
மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த ரமேஷின் வாழ்க்கையில் முதல் இடி இறங்கியது, இவரது தாயும், தந்தையும் அடுத்தடுத்து இறந்த போதுதான்.
தாயும், தந்தையும் திடீரென இறந்துவிட, முதல் முறையாக தனிமைப்படுத்தப்பட்டார், முதல் முறையாக தவித்துப்போனார், முதல் முறையாக எதிர்காலத்தை எண்ணி மிரண்டு போனார்.
கலங்கி நின்ற இவரை மகேந்தினின் ஈரநெஞ்சம் அமைப்பினர் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டனர்.
காப்பகத்தில் தான் யாருக்கும் பிரயோசனமில்லாமல் இருப்பதும், இலவசமாக உணவு வாங்கி சாப்பிடுவதும் இவருக்கு நெருடலாகவே இருந்தது, நாம் இவர்களுக்கு பாராமாக இருக்கிறோமோ என்ற உணர்வு அடிக்கடி ஏற்பட ஏதாவது சொந்தமாக தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்று எண்ணினார்.
தந்தை தந்துவிட்டு போன பணத்தையும், உறவினர்கள் மற்றும் ஈர நெஞ்சம் அமைப்பு போன்றவர்கள் கொடுத்து உதவிய நன்கொடைகளையும் கொண்டு கோவை சாய்பாபா காலனி, செந்தில் நகர், கல்பனா திருமண மண்டபம் அருகே ஒரு செருப்பு கடையை துவக்கிவிட்டார். மறைந்த தாயார் பழனியம்மாள் என்றால் இவருக்கு உயிர் ஆகவே அவரது பெயரின் முதல் எழுத்தையும், இவரது பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து கடைக்கு பிஆர் டிரேடர்ஸ் என்று வைத்துவிட்டார்.
தொண்டு செய்ய ஆசை:
இவருக்கு அதுவரை செருப்பு வியாபாரம் பற்றியும் தெரியாது. ஆனாலும் துணிந்து உழைப்போம், இதைவைத்து பிழைப்போம் என்ற இவரது முயற்சிக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. தன்னை கௌரவமாக காப்பாற்றி கொள்வதற்கு ஏற்றவாறு வருமானம் வருகிறது. இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஊனமுற்ற இவர் கடையில் ஒரு உதவியாளரை வேலைக்கு நியமிக்கலாம் என்ற நிலை வந்தபோது தன்னைப்போலவே ஆதரவில்லாத கருணை இல்லத்து நண்பரையே வேலைக்கு வைத்துள்ளார்.
வாரத்தின் ஏழு நாளும் கடை உண்டு காலை ஏழு மணிக்கு கடைக்கு வந்தால் இரவு 9 மணி வரை கடையில்தான் இருப்பார். இவரது நேர்மையான வியாபாரம் பலருக்கு பிடித்து போனதால் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். வருகிறவர்கள் ஷூ மற்றும் கொஞ்சம் காஸ்ட்லியான பிராண்டில் காலணிகள் கேட்டால் கொடுக்கமுடியாத சூழ்நிலையில் உள்ளார். பாங்க் உதவி கிடைத்தால் தொழிலையும்,கடையையும் விரிவு பண்ணி வியாபாரத்தை பெருக்க வேண்டும் வரும் வருமானத்தை கொண்டு நிறைய தொண்டு செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளார். இவரது எண்ணம் ஈடேற வாழ்த்துவோம்.
இவரது தொடர்பு எண்: 9944871680.


தகவல் - எல்.முருகராஜ்  & Nagoorkani Kader Mohideen Basha

Thursday, July 17, 2014

இப்ப நல்லா இருக்கேன். நல்லா இருக்கேன்..நல்லாவே இருக்கேன்.

வணக்கம் என் இனிய நட்புகளே...
மருத்துவ சோதனைகள் முடிந்து விட்டன.
நான் இப்ப நல்லா இருக்கேன். நல்லா இருக்கேன்..நல்லாவே இருக்கேன்.
ஆனாலும் இன்னும் 1 1/2 ஆண்டுகளுக்கு ஒரு நாள் கூட விடாமல் அதனை எதிர்க்கும் மாத்திரை சாப்பிட வேண்டும்.
”சந்தோஷம் இது சந்தோஷம்..பொன் ஊஞ்சலில் இன்ப சங்கீதம்
வானத்தில் சிறகின்றி தனியாய் பறந்து திரியும் சந்தோஷம்..


நான் எவ்வித பாதிப்பும் இன்றி..நல்லா இருக்கேன். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது நண்பர்களே..
ஏன் தெரியுமா?
புற்று நோய் வந்து 3,4 ம் ஆண்டுகளில் இது நுரையீரல்/கல்லீரல்/எலும்பைத் தாக்கும்.இது இல்லாமல் இருப்பது கடினம்..
அந்த பயத்துடனே..அது மீண்டும் எப்ப வந்து தாக்குமோ என்ற அச்சத்துடனேயே புற்று நோய் சிகிச்சை முடிந்தவர்கள் இருப்பார்கள்.
எனது சில நண்பர்கள் அப்படியே இந்த உலகை விட்டு போயே போய்விட்டவர்களும் உண்டு//
அதனால்தான் எனது டாக்டர்கள் அனைவரும் do not think of negatively.. that will create problem எதுவ்ம் வராது நன்றாக இருப்பேன் என நம்பிக்கையுடன் எண்ணுங்கள் என்றனர்.
மேலும் உங்கள் தன்னம்பிக்கைதான் எங்களின் மருந்தைவிட அதிகம் உங்களிடம் செயல் புரிந்தள்ளது.
..உங்களின் இன்றைய உடல் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது உங்களின் தன்னம்பிக்கைதான்” என்றார்
"Be active at all times. Do not allow your mind to think about unnecessary fears and activities... your positive thinking will lead to improve your immunity and make a preventive measure to disease "என்று ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தினர்.
நேற்று நான் கோவை இராமகிருஷ்ணா மருத்துவ மனை சென்று வழக்கமாக 3 மாதத்துக்குப் பின் செய்யும் சோதனைகளை 5 மாதங்கள் கழித்து செய்துகொண்டேன்.
இதனால் என்னுடைய டாக்டர் கார்த்திகேஷுக்கு வருத்தம் தான்.
என்னால் என் பணிப்பளுவுடன் இணைத்து சரியான நேரத்துக்குப் போகமுடியவில்லை.
ஆனால் நேற்றைக்கு மருத்துவ சென்று 3 சோதனைகள் முடித்தாகி விட்டது. ஒன்றுதான் பாக்கி இருக்கிறது.அதுதான் Bone scan. அதனைஅடுத்த மாதம்தான் செய்ய வேண்டும்.
டாக்டர் நான் ரொம்ப நன்றாக இருக்கிறதாக physical test, abdominal scan, X-ray and mammogram எல்லாம் பார்த்து சொல்லிவிட்டார். அத்துடன் இன்னும் 6 மாதம் கழித்து வந்தால்போதும் என்றும் டாக்டர் கார்த்திகேஷ் சொன்னார்.
என்னைப் பார்த்ததில் டாக்டருக்கும் ஒரே மகிழ்ச்சி.
படத்தைப் பாருங்கள் தெரியும்.

”நீங்கள் வயதாகிவிட்டதாக எண்ணி, பணிகளை குறைக்க வேண்டாம். ஊர் சுற்றுவதை நிறுத்த் வேண்டாம். தேவையின்றி ஓய்வெடுக்க வேண்டாம். மற்றவர்கள் ரெஸ்ட் எடுங்கள் என்றாலும், உங்களால் முடிந்தால்..ஓடிக்கொண்டே இருங்கள்..அது தான் வாழ்வை நீட்டிக்கும் ஒரே காரணி ..அமிர்தம் ” என்றார்..
“வீட்டில் முடங்கி ரெஸ்ட் எடுத்தால், தானாகவே, சோர்வும், வயதான உணர்வும், பலவீனமும். ஏற்படும் ”என்றார்.
”நீங்கள் எப்போதும் போலவே இருங்கள்..யார் சொல்வதற்காகவும் பணிகளை குறைக்க வேண்டாம் ”என்றார்;
அவரும் கடின உழைப்பாளிதான்
. நேற்று காலை 9 மணிக்குபுற்று நோய் அறுவை சிகிச்சை அறைக்குச் சென்றவர் மாலை 6 .30 மணிக்குத்தான் புற நோயாளிகள் அறைக்கு வருகின்றார்.
இடையில் மதிய உணவு எடுத்துக் கொள்ளவில்லை.
ஏன் டாக்டர் இவ்வள்வு நேரம் என்று கேட்டால் ,,தொடர்ந்து காலை 9-மாலை 5.30 வரை சர்ஜரி. ”
”ஏன் டாக்டர் இடையில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து மதிய உணவு சாப்பிட்டிருக்க கூடாதா? “ என்றால்,
டாக்டர் சிரித்துக் கொண்டே,, ”சர்ஜரியை கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்துவிட்டு வந்துதான் சாப்பிட வரவேண்டும் ”என்றார்..
கொஞ்சம் அமைதி, கொஞ்சம் நகைச்சுவை.. மென்மையான மருத்துவர்.
எப்போதும் உதட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிரிப்பு..படம் பாருங்கள்..தெரியும். அவரின் அறையில் எடுத்தது.
புன்முறுவல்,&சிரிப்பு..இவை..பொதுவாக மருத்துவர்களுக்கு இல்லாத சொத்து
அவரை நினைத்து நெஞசம் பெருமிதம் கொள்கிறது..
நெஞ்சு சிலிர்க்கிறது..ரொம்ப நெகிழ்வாகவும் உள்ளது.
இவரைப் போன்ற மனிதம் மிக்க டாக்டர்களால்தான் உலகம் உய்விக்க்ப்படுகின்றது.
அடுத்த படம்.. Patrina எனக்கு 4 ஆண்டுகளாக mammogram எடுக்கும் சகோதரி..
எங்களின் பின்னால் mammogram எடுக்கும் பெரிய்யய கருவி.


நன்றி: திருமதி Mohana Somasundram சகோ.

திருமதி.மோகனா சோமசுந்தரம் அவர்களின், தன்னம்பிக்கை ஊட்டும் மேற்கண்ட பதிவுக்கு கருத்துக்களில் சில: 

N.Rathna Vel: நான் இப்ப நல்லா இருக்கேன். நல்லா இருக்கேன்..நல்லாவே இருக்கேன் = மிக்க மகிழ்ச்சி அம்மா திருமதி Mohana Somasundram. எனது பக்கத்தில் பகிர்கிறேன். எல்லோருக்கும் முன்னோடி நீங்கள்.


Saroja Saroja Nagaikavin Nagaikavin: மகிழும் மனம் குதித்தாடுகிறது உங்களைப்போலவே தன்னலமில்லா உழைப்பின் சிகரங்கள் நூறாண்டுக்கு மேலும் வாழணும் மேம் என் கண்களும் மனமும் கலங்குகின்றன.மகிழ்ச்சியால்.முடிந்தால் நானே வ்ந்து உங்களைச் சந்தித்து ஆசிபெற எண்ணியிருக்கிறேன் மேம்.கவினுடன் உங்களைப்பார்த்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மேம்

Arumugam Eswaran: வானம் கைக்கெட்டும் தூரம் தான்

Raghu Nathan சமூகத்திற்கு தங்கள் பணி மேலும் தொடர பாராட்டுக்கள்....Wishing you a healthy long life

Thangam Vallinayagam நோய் இருப்பினும் அதை நினைக்காமல் மற்றபணிகளில் உங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டு வாழ்வது உண்மையில் பாராட்டுதலுக்குரியது.உங்கள் பணி தொடர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெற வாழ்த்துக்கள் .

Chola Nagarajan அன்புத் தோழி மோகனாவுக்கு, 
மிகவும் மகிழ்ச்சி. இனி உங்களுக்கு ஒன்றுமில்லை. கவலை மட்டும் எப்போதும் வேண்டாம். கேரளத்தில், மலையாள சினிமா சங்கத்தின் தலைவரும், பிரபல நகைச்சுவை நடிகரும், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் ஆதரவு பெற்ற
ு வென்ற சுயேச்சை உறுப்பினருமான மரியாதைக்குரிய இன்னொசென்ட் அவர்கள் இதேபோல நோய்வாய்ப்பட்டு, போராடி வெற்றி கண்டவர். அவரது வாழ்க்கை வலி பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதுபோல, உங்களுடைய பணிகளும் சிறக்க, அமைதியும், ஆரோக்கியமுமான வாழ்க்கை உங்களுக்கு அமையும் என நம்புங்கள். நாங்களெல்லோரும் உங்களுடனேயே இருப்போம் தோழி!

Kumaraguruparan Ramakrishnan தோழர் மோகனா, தங்கள் தன்னம்பிக்கை கண்டு உண்மையாகவே மனம் நெகிழ்கிறது...இதர நண்பர்களுக்கும் இந்த செய்தியைக் கொண்டு போக வேண்டும்... வாழ்த்துகள் தோழர்...

Dhavappudhalvan Badrinarayanan A M எத்துனைய பெரிய உடல்நலக் கோளாறுகள் தோன்றினாலும், மனத்தைத் தளரவிடக் கூடாது என்பதற்கு, மற்றவர்களுக்கு நீங்களும் ஓர் உதாரணம் சகோ. வருகின்ற நாட்கள் அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள் சகோ.

Monday, June 9, 2014

மாற்றுத்திரனாளிகளுக்கு ஃபிட்டர் ( Fitter ) தொழிற்பயிற்சி




தமிழக அரசின் சார்பில், 25 வயதுக்கு உட்பட்ட, காது கேளாத மாற்றுத்திரனாளிகளுக்கு இலவச  ஃபிட்டர் ( Fitter ) தொழிற்பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கே.கே.நகர் மாற்றுத்திரனாளிகளுக்கான ஆணையர் அலுவலகத்தில் தொடர்புக் கொண்டு, விண்ணப்பங்களை வரும் 16ம் தேதிக்குள்  தர  வேண்டும்.
- பாலிமர் டிவி செய்தி.

# பயன்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே.



Friday, May 9, 2014

இந்திய தொடர் வண்டி பயண சலுகை

செவிப்புலன், செவி மற்றும் வாய் செயலற்றவர்களுக்கு, இந்திய தொடர் வண்டி பயண சலுகையின் அரசு உத்தரவு.   




Tuesday, March 25, 2014

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நிறைவு

தையல் பயிற்சி நிறைவு.

சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கமும் இணைந்து நடத்திய பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சேலம் சிவாம்பிகா பஸ் அலுவலக வளாகத்தில் Ln. Dr. P.அத்தியண்ணா தலைமையில் நடைப்பெற்றது.

Ln.Dr.P.அத்தியண்ணா, சங்க செயலாளர் வெங்கட்ராமன், சங்க ஆலோசனை குழு உறுப்பினரான யாம் ( A.M.பத்ரி நாராயணன்), Ln.Dr.P.அத்தியண்ணா மகன், மருமகள், தையற்பயிற்சி ஆசிரியை திருமதி.விஜயலட்சுமி மற்றும் திரு.S.ஏசுதாஸ் ராஜேந்திரன் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்க விழா சிறப்பாக நடந்தேறியது.

தையற்பயிற்சி ஆசிரியருக்கான பயிற்சி கட்டணம் முழுவதையும்
Ln.Dr.P.அத்தியண்ணா அவர்கள் ஏற்றுக் கொண்டார்.