Thursday, July 10, 2008

அறிய வகை '' பாம்பே ரத்த குரூப் ''

நவிமும்பேயில் பெலாபூர் பகுதியை சேர்ந்தவர் யாசிம் முல்லா; வயது 65. இவர் கல்லீரல் சுருக்க நோயால் பாதிக்கப்பட்ட அவரின், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பெரிதும் குறைந்து போனது. ஆபத்தான நிலையில், வாஷி எம்.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொதுவாக, ரத்தத்ததில் 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சிவப்பு ரத்த அணுக்கள் இருக்க வேண்டும். பரிசோதனையில்,, 6 சதவீத சிவப்பு ரத்த அணுக்கள் மட்டுமே இருந்தது.. இதையடுத்து அவருக்கு மாற்று ரத்தம் செலுத்த முடிவு செய்து, ரத்த வகை பரிசோதித்தபோது, அது அரிய வகையான ஏ.பி.ஓ.,ரத்த குரூப்பை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இது போன்ற அரிய வகை ரத்தம், சிலருக்கு மட்டுமே இருக்கும். இந்தியாவில்,இந்த அரிய வகை ரத்த குரூப், முதல் முதலில் மும்பையில் கண்டு பிடிக்கப் பட்டதால், இதற்கு மும்பே ரத்த குரூப் என்று பெயர் சூட்டப் பட்டது. கிழக்கிந்தியர்கள், ஜப்பபானியர்கள், காசினியர்கள் மத்தியில் மட்டடுமே இந்த வகை ரத்த குரூப் உள்ளவர்கள் இருக்கின்றனர்.
இந்த வகை ரத்த குரூப் கொண்டவர்கள் எம்.ஜி.எம்.மருத்துவமனையின் இணையதளத்தில் 4 பேரும், பூனே கே..இ.எம். மருத்துவமனையில் 20 பேரும்,,ரத்த தானத்திற்காக பதிவு செய்துள்ளனர். எம்..ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம், நாடு முழுவதுமுள்ள ரத்த வங்கிகளில் '' பாம்பே ரத்த குரூப் '' ரத்தம் இருக்கிறதா என்று தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
ஆனால், அதிகாலை 4 மணிக்கு யாசிமுக்கு ரத்தம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வகை ரத்தம் கிடைக்காத நிலையில், பெரும் முயற்சிக்கு பிறகு, பூனே ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனையில் ஒரு யூனிட்டும், மும்பே சாந்தா குரூசை சேர்ந்த பி.எஸ்.ஐ.எஸ். மருத்துவமனையில், ஒரு யூனிட்டும் ரத்தம் கிடைத்தது. ஆனால், அறுவை சிகிச்சை மேற்கொள்ள மேலும் 2 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. இதையடுத்து, யாசிமின் குடும்பத்தினரின் ரத்தம் பரிசோதிக்க பட்டது. நல்ல வேலையாக யாசிமின் மகள்களில் இருவருக்கு இதே வகை ரத்தம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு முடித்தனர்.
யாசிமின் உறவினர்கள் சிலருக்கு இந்த வகை ரத்த குரூப் இருப்பது, அவர்கள் இது வரை ரத்த பரிசோதனை செய்து கொள்ளாமல் இருந்ததால், அவர்களுக்கு தெரியாமலே இருந்தது. மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பியுள்ள யாசிம், கிராமங்கள் தோறும் சென்று ரத்த குரூப் பரிசோதனையின் அவசியத்தையும், ரத்த தானம் அளிக்க வேண்டியதின் அவசியத்தையும், ''பாம்பே ரத்த குரூப் '' இருப்பவர்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.
வாஷி எம்.ஜி.எஎ..மருஉத்துவமனையில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. ஆனால், ''பாம்பே ரத்த குரூப் '' நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடந்ததும், இந்த வகை ரத்தத்ததிற்காக போராட நேர்ந்ததும் இதுவே முதல் முறை.

''நாமும் இரத்த பரிசோதனை செய்துக் கொள்வோம்.''

''இரத்த தானத்தையும் செய்வோம்.''

''இரத்த தானம் செய்யவும் ஊக்குவிப்போம். ''