Sunday, September 22, 2013

மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும்




சேலம் உருக்காலையின், சமுக பொறுப்பு திட்ட முன் முயற்சி சார்பிலும், சேலம் சோனா தொழில் நுட்ப கல்லூரி சமுக பொறுப்பு திட்ட முன் முயற்சி சார்பிலும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் ஆயத்த ஆடை தையற் பயிற்சி சேலம் சோனா தொழில் நுட்ப கல்லூரி சமுக பொறுப்பு திட்ட முன் முயற்சி மையத்தில் நடைப் பெற்று வருகிறது. இதுவரை 430 பெண்களுக்கு ஆயத்த ஆடை தையற் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதில் 30 மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் அடங்குவர். இவர்களில் 80% சதவீதம் பேர் ஆயத்த ஆடைத தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.

சேலம் உருக்காலையின், சமுக பொறுப்பு திட்ட நிர்வாகிகளுக்கும், சேலம் சோனா தொழில் நுட்ப கல்லூரி சமுக பொறுப்பு திட்ட நிர்வாகிகளுக்கும், அவர்களின் சமுக சேவை விரிவடைய வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.



 
 
 
 
 
 

Saturday, September 21, 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை



 ஒரு மாற்றுத்திறனாளியும், நல்ல உடல்நிலையுடன் உள்ள ஒருவரும்   திருமணம் புரிந்துக் கொண்டால், அவருக்கு 25 ஆயிரம் ரூபாயு, 4 கிராம் தங்கமும்,  திருமண  உதவித் தொகையாக, தமிழக அரசால்  வழங்கப்படுகிறது.  

ஆனால் இரு மாற்றுத்திறனாளிகள் இனைந்து திருமணம் புரிந்துக் கொண்டால், அவர்களுக்கு அதேதோகை என்பது ஒப்புமையற்றதாகவே கருத வேண்டியுள்ளது. சார்ந்து வாழும் நிலை மற்றவர்களை விட கூடுதலாக இருப்பதை அனைவரும் உணர்வர். ஆகவே தமிழக அரசு  இதை கவனத்தில் கொண்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், வாழ்வாதாரத்தை திடப்படுத்தும் விதமாகவும், அரசால் வழங்கப்படும் திருமண உதவித் தொகையை இரட்டிப்பாக உயர்த்தி தர ஆணையிட வேண்டுமென அனைத்து தமிழக மாற்றுத்திறனாளிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 

இணைப்பு: திட்டம்

உத்தரவு ஒப்பீட்டுக்கான இணைய இணைப்பு முகவரி.
http://www.thoothukudi.tn.nic.in/tamil/ddawo.html



இ.ஒரு கை அல்லது ஒரு கால், அல்லது இரண்டு அவயவங்களும் முழுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ.25,000- மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல் இருவருக்கும் இதுவே முதல் திருமணமாக இருக்க வேண்டும்.  21 வயது நிரம்பியவராய் இருக்க வேண்டும் ரூ.12,500 ரொக்கமாகவும், ரூ.12,500 சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும் (மாற்றுத்திறனாளி திருமண உதவித்தொகை)
ஈ. மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் செய்யம் நபருக்கு ரூ.25,000- மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல் இருவருக்கும் இதுவே முதல் திருமணமாக இருக்க வேண்டும்.  21 வயது நிரம்பியவராய் இருக்க வேண்டும் ரூ.12,500 ரொக்கமாகவும், ரூ.12,500 சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும் (மாற்றத்திறனாளி திருமண உதவித்தொகை)

Monday, September 16, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு - சேலம் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு - சேலம் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி

உடற்குறை மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோருக்காக மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 14/9/13 சனிக்கிழமை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவை சேலம் மாவட்ட மாற்றுத்திறன் படைத்தோர் நல்வாழ்வு சங்க தலைவரும், எமது நண்பருமான அத்தியண்ணா துவைக்கி வைத்தார்.

1) கை, கால் ஊனமுற்றோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து எறிதல்,

2) மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல்.

3) பார்வையற்றோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல். டென்னிஸ் பந்து எறிதல்.

4) காது கேளாதோருக்கு = 100மீ, 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல். ஈட்டி எறிதல்.
போன்ற போட்டிகளில் 130 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் பங்கேற்றனர். மாலையில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வரவேற்க, பிரகாசம் வெற்றிப்பெற்றவர்களுக்கு சேலம் சென்ட்ரல் இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவர் கல்பனா இன்பராஜ் பரிசுகள் வழங்க, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நடராஜன், சேலம் ஜேசிஐ நாச்சிமுத்து ராஜா, விஜயகுமார் மற்றும் பலர் பங்கேற்க, சேலம் ஜிம்னாஸ்டிக் பயிற்றுனர் ஜெயமோகன் நன்றி கூறினார்.

வெற்றிப் பெற்றவர்களை ஊக்குவிக்க வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

Monday, September 9, 2013

ஸ்ரீ கஜமுகன் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்









குள்ள குள்ளனே !
குண்டு வயிறனே !!
வெள்ளைக் கொம்பனே !!!
வெள்ளை விநாயகனை தொழுதிடுவோமே.

ஸ்ரீ கஜமுகன் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.