Monday, March 16, 2009

திருகோயில்களில் எவ்விதம் வழிப்படுவது.

* திருகோயில்களில் கொடிமரம்,பலிபீடம் இவற்றின் முன்புதான் கீழே விழுந்து வணங்க வேண்டும். இந்த கொடிமரத்தையும்,பலிபீடத்தையும் தாண்டி விட்டால் உள் பிரகாரத்திலும் கருவறையின் முன்பும் மற்ற இடங்களிலும் கீழே விழுந்து வணங்கக் கூடாது. ஏனெனில்கொடிமரம் தான்டிய பின்பு கருவறை வரையிலும் சக்தி நிறைந்த பல தேவதைகள் மந்திரப் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. அவ்விடம் நாம் மீழே விழுந்து வணங்கினால் அந்த தேவதைகள் மீது நமது கால் படக்கூடும்.

*  திருகோயில்களில் அபிஷேகம் அல்லது திருமஞ்சள் தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் போது இடதுகையின் மேல் சிறு வஸ்திரம் வைத்து அதன் மேல் வலது உள்ளங்கையை குவித்து வைத்துக் கொண்டு அந்த தீர்த்தத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு காரணம் அபிசேகத்தினால் புனித சக்தி வாய்ந்த அந்த ஜலம் கீழே விழுந்து பக்தர்களின் கால்களில் மிதிப்படக்கூடாது என்பதே.

*  திருகோயிலினுள் செல்லும் போது கைலி மற்றும் கால்சட்டை ஆகியவற்றை அணிந்து செல்லக்கூடாது. கேரளா ஆலயங்களில் இவ்விதிமுறைகள் கண்டிப்பாக அமல் செய்யப்படுகின்றன.

*எக்காரணத்தைக் கொண்டும் ஈரத்துணியுடன் திருகோயிலுக்குள் சென்று வழிப்படக்கூடாது. திருப்பதி-திருமலை திருகோயிலினுள் அங்கப் பிரதட்சினம் செய்பவர்களுக்கு மட்டும் இவ்விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

* திருகோயிலில் இறைவனைத் தவிர வேறு எவராக இருந்தாலும் அவர்களை வணங்ககூடாது.

* திருகோயிலினுள் ஆத்ம்ப் பிரதட்சணம் ( தன்னைத் தானே சுற்றிக் கொள்வது ) கூடாது.

* பிரசாதமாக கொடுக்கும் குங்குமம், விபூதி, துளசி, வில்வம் ஆகியவற்றைப் பலர் திருகோயில்களிலேயே போட்டு விட்டு வந்து விடுகின்றனர். இது மிகவும் தவறாகும்.

Tuesday, March 10, 2009

எல்லாம் கிடைக்கும் --- 1

''எல்லாம் கிடைக்கும்'' என்ற இந்த தலைப்பிலே, திரு.மனம் சேர சந்திரகாசம் எம்.ஏ.,பி.எட்., என்ற ஒரு பெரியவரால் 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த ஒரு சிறு பதிப்பை (நூல்)  வாசிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்து. அப்புத்தகத்தில் வெளியிடப்பட்டப்படியே தொடர்ந்து வெளியிடுகிறேன். இடையிடையே தேவையென மனதுக்கு படின், என்னுடைய கருத்துக்களையும் அடைப்புக் குறிக்குள் வெளியிட்டிருப்பேன்.உங்கள் மேலான கருத்துக்களையும் தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

1. ஆண்டவனோடு பழக வேண்டும்
=============================

         அந்த நண்பர் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்.அவர் பெரிய பணக்காரரோ, பெரிய அதிகாரியோ இல்லை. சாதாரண அரசு ஊழியர். தொட்டுக்கொள், துடைத்துக்கொள் என்று தான் அவர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கையில் எல்லோருக்கும் வரும் சங்கடங்கள், துன்பங்கள் எல்லாம் அவருக்கும் வருகின்றன. இருந்தாலும் அவர் எதற்கும் அலட்டிக் கொள்வதே இல்லை. எப்போதும் புன்னகையுடனே வலம் வருவார். மனத்தை லேசாக வைத்துக் கொண்டு எந்த சூழ்நிலையையும் துணிவுடன் எதிர்க் கொள்வார். அவர் மகிழ்ச்சியின் ரகசியம் என்ன என்று தெரிந்துக் கொள்ள உண்மையிலேயே எனக்கு பெருத்த ஆர்வம்.
       
        ஒரு நாள் அவரிடம் நேரடியாகவே கேட்டேன். எப்படி உங்களால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க முடிகிறது?. சிறு சலனம் கூட அடையாமல் கடமைகளை எல்லாம் செய்துக் கொண்டிருக்கிறீர்களே என்றேல்லாம்  வெளிப்படையாகவே கேட்டேன்.

         ஆண்டவன் தான் , நான் நெருங்கி பழகும் பெரியவர் என்றார் நண்பர். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவருக்கு ஏதோ மரை கழண்று விட்டதோ என்று என் அறிவுக் குறைவால் நினைத்தேன்.
                                                                                                                                                                                                                                                                                                           தொடரும்.....