Tuesday, March 10, 2009

எல்லாம் கிடைக்கும் --- 1

''எல்லாம் கிடைக்கும்'' என்ற இந்த தலைப்பிலே, திரு.மனம் சேர சந்திரகாசம் எம்.ஏ.,பி.எட்., என்ற ஒரு பெரியவரால் 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த ஒரு சிறு பதிப்பை (நூல்)  வாசிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்து. அப்புத்தகத்தில் வெளியிடப்பட்டப்படியே தொடர்ந்து வெளியிடுகிறேன். இடையிடையே தேவையென மனதுக்கு படின், என்னுடைய கருத்துக்களையும் அடைப்புக் குறிக்குள் வெளியிட்டிருப்பேன்.உங்கள் மேலான கருத்துக்களையும் தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

1. ஆண்டவனோடு பழக வேண்டும்
=============================

         அந்த நண்பர் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்.அவர் பெரிய பணக்காரரோ, பெரிய அதிகாரியோ இல்லை. சாதாரண அரசு ஊழியர். தொட்டுக்கொள், துடைத்துக்கொள் என்று தான் அவர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கையில் எல்லோருக்கும் வரும் சங்கடங்கள், துன்பங்கள் எல்லாம் அவருக்கும் வருகின்றன. இருந்தாலும் அவர் எதற்கும் அலட்டிக் கொள்வதே இல்லை. எப்போதும் புன்னகையுடனே வலம் வருவார். மனத்தை லேசாக வைத்துக் கொண்டு எந்த சூழ்நிலையையும் துணிவுடன் எதிர்க் கொள்வார். அவர் மகிழ்ச்சியின் ரகசியம் என்ன என்று தெரிந்துக் கொள்ள உண்மையிலேயே எனக்கு பெருத்த ஆர்வம்.
       
        ஒரு நாள் அவரிடம் நேரடியாகவே கேட்டேன். எப்படி உங்களால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க முடிகிறது?. சிறு சலனம் கூட அடையாமல் கடமைகளை எல்லாம் செய்துக் கொண்டிருக்கிறீர்களே என்றேல்லாம்  வெளிப்படையாகவே கேட்டேன்.

         ஆண்டவன் தான் , நான் நெருங்கி பழகும் பெரியவர் என்றார் நண்பர். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவருக்கு ஏதோ மரை கழண்று விட்டதோ என்று என் அறிவுக் குறைவால் நினைத்தேன்.
                                                                                                                                                                                                                                                                                                           தொடரும்.....

2 comments:

c g balu said...

தொட்டுக் கொள் துடைத்துக் கொள் - நல்லா கோட்பாடு.

Dhavappudhalvan said...

அது அவரின் குடும்ப சூழ்நிலை. வசதி இருக்கின்றவர்களே எப்போதும் மூக்கை சிந்திக்கொண்டிருக்கின்ற போது, அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்த வாழ்க்கை தான்.