Wednesday, April 10, 2013

மாற்றுத்திறனாளிப் பெண்ணை எட்டி உதைத்தது


மாற்றுத்திறனாளிப் பெண்ணை எட்டி உதைத்தது, சென்னை தண்டையார்பேட்டை காவல்துறை ( செய்தி:  GTV News April 19th-10pm) ஜீடிவி செய்தி (ஏப்ரல் 19 ந் தேதி  - இரவு 10 மணி செய்தியில்)

* குற்றம் எதுவாக இருப்பினும், ஒரு பெண்ணை, அதுவும் மாற்றுத்திறனாளிப் பெண்ணை எட்டி உதைத்ததற்கு, தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகளின் சார்பில் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொடூரக் குற்றவாளிகளுக்கும் பிரியாணி விருந்திட்டு பாதுகாக்கும் காவல்துறை (இது உதாரணத்துக்குதான்.  எதுவாக இருப்பினும் தவறு என சுட்டிக் காட்டதான்). மாற்றுத்திறனாளிப் பெண், குற்றமே புரிந்திருந்தாலும் கூட முறைப்படி (சொல்லவே கூடாது. இவர்கள் முறையே தனி தான்) விசாரிப்பதை விடுத்து, இப்படி அராஜக செயலாக நடந்துக் கொண்டிருப்பது, காவல் துறைக்கு அழகும் அல்ல. கண்ணியமும் அல்ல.

* காவல்துறைக்கு, உங்கள் வீட்டு அல்லது உங்களுக்கு தெரிந்த நல்ல நிலையில் உள்ள ஒரு பெண்ணை, இப்படி நடத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா?

* நீதிமன்றத்திற்கு: தன்னிச்சை நடவடிக்கையாக, நீதிமன்றமே வழக்கை எடுத்து, அவமானப்படுத்தப்பட்ட, பெண்ணை, அதுவும் மாற்றுத்திறனாளிப் பெண்ணை எட்டி உதைத்ததற்கு தக்க பரிகாரம் வழங்க வேண்டும். அவமானப்படுத்த பட்டதற்கு நஷ்ட ஈடாக, அந்த செயலில் ஈடுபட்ட காவலர்களிடமும், தமிழக அரசிடமும் இருந்து ஒரு பெருந்தொகை, பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு  கிடைக்க  உத்தரவு இட வேண்டும்.
மக்களின் நண்பன் என கூறும் காவல்துறையின் இச்செயல்பாட்டிற்கு,  நீதி மன்றம் வழங்கும் உத்தரவு, தக்கதொரு அறிவுரையாக அமைய வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் உணர்வாகும்.

* ஒரு கண்ணியமிக்க பெண் முதல்வரின் ஆட்சிக்கு, இதுபோன்ற செயல்கள் களங்கமே ஏற்படுத்தும் என்பது நிதர்சனமாகும்.  

**** வணக்கம் நண்பர்களே! விருப்பக்குறி மட்டும் போட்டு விடாமல், கருத்துக்களை (தமிழ், இங்க்லீஷ், தங்க்லீஷ்) பதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தங்கள் பக்கங்களில் மறுபதிவிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு  ஆதரவளித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். 

No comments: