Friday, April 5, 2013

தெரிந்துக் கொள்ளுங்கள்....



2013 ஏப்ரல் 3ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில், சத்துணவு மற்றும் சமுக நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காகவும் சில புதிய அறிவுப்புகளை சத்துணவு மற்றும் சமுக நலத்துறை மாநில அமைச்சர் வளர்மதி கீழ்கண்டவாறு அறிவித்தார்.
1)      மாற்றுத்திறனாளிகளில், கல்லூரி மாணவர்களுக்கும், சுயத்தொழில் புரிவோருக்கும், மட்டுமே பெற்றோல் இஞ்ஜின் பொருத்திய ‘ஸ்கூட்டர்’ வழங்கப்படுகிறது. ( ** இது, சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. எனவே சட்ட மன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட சமுக நலத்துறையின் மூலமாக விண்ணப்பித்து பெறலாம்)  
2)      .ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்க ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
3)      படித்த இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட்த்தின் கீழ் 15 சதவீத மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் பங்காக, 5 சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது. இனி **மாற்றுத்திறனாளிகள் செலுத்த வேண்டிய, ஐந்து சதவீத்த் தொகையை, அரசே ஏற்று வழங்க 50ம் இலட்ச ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்படும்.
4)      மாற்றுத்திறனாளிகள் சிறு மற்றும் குறுந்தொழில், சுயவேலை வாய்ப்பு வங்கி கடன் திட்டத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் மானியம், 5,000 ரூபாய், இனி 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
5)      செவித்திறன் குறையுடையோருக்கான ஆரம்ப நிலை மண்டல பரிசோதனை மையங்கள், 10 மாவட்டங்களில் 1.98 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
6)      மாற்றுதிறனாளிகளுக்கான 23 அரசு சிறப்பு பள்ளிகளில் பயலும் மாணவ, மாணவியரின் நலனுக்காக 18 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில்  சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்படும்.
7)      கோவில்களில் மாற்றுத்திறனாளிகளிடம் மனிதநேயத்துடன் நடந்து, மூன்று சக்கர வாகனத்தில்!!!!!!! [மூன்று சக்கர வாகனமா/ சக்கர நாற்காலியா?] வைத்து மூலஸ்தானத்தில் ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக அரசு ஏற்பாடு செய்யுமென்றும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது எனவும் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.
8)      மாற்றுதிறனாளி குழந்தைகள் மையத்திலும் மதிய உணவு என தலைப்பு செய்தி உள்ளது. ஆனால் அது பற்றி விபரம் இல்லை.

வேண்டுகோள்:
*சக்கர நாற்காலிகளை பழுதின்றி பராமரிக்க வேண்டும்.
*கட்டணம் வசூலிக்கக் கூடாது.
*உதவுகிறேன் என்ற பெயரில், ஆலய பணியாளர்களோ, தனி நபர்களோ  பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்க கூடாது.

**திருபதி திருமலை தேவஸ்தானத்தில் மாற்றுத்திறனாளிகளிடமும், முதியோர்களிடமும் நடந்துக் கொள்ளும் பண்பை கண்டு உணர்ந்து கொள்வதுடன், கருத்தில், மனத்தில் நிறுத்தி செயல்பட வேண்டும்

செய்தி: காலைக்கதிர் சேலம். 04/04/2013.

No comments: