Saturday, March 28, 2015

கேள்வி பதில் - 3




Selvan Selva


Hi friends enaku eye prblm enaku certificate la 100 % iruku..uthavi thogaikaga apply panamudiuma enaku konjam detail solringala

நண்பர்களே, எனக்கு கண் பார்வை  பிரச்சனை. சான்றிதழில் 100% சதவீதம் குறித்துள்ளனர். உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்க முடியுமா?
விபரம் தெரிந்தவர்கள் உதவ முடியுமா?


Dhavappudhalvan Badrinarayanan A M:
அன்பு selvin selva வாழ்த்துக்கள். அரசு மூலம் ஏதேனும் ஒரு உதவிதான் பெறமுடியும். உதாரணமாக மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற்றால் மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெற அனுமதியில்லை.

மாதாந்திர உதவித்தொகை பெறுபவர்கள் மற்ற உதவித்தொகைகளோ, கடனோ பெற முடியாது. வேலை வாய்ப்பில் பதித்து உதவித்தொகை பெறுபவர்களுக்கும் பொருந்தும்.
‪#‎ஆனால்‬ மருத்துவ காப்பிடு திட்டங்களுக்கும் உதவித்தொகை பெறுவதற்கும் சம்மந்தம் கிடையாது . உதவித்தொகை பெறுபவர்கள் மற்ற உதவி களான செயற்கை உறுப்புகள், மூன்று சக்கர சைக்கிள்கள், விழியிழந்தோருக்கான சிறப்பு கணினி, கண்கண்ணாடிகள், மடக்கு குச்சிகள், பாடங்களை கற்க டிவிடி, காது கேளாதோருக்கான செவி ஒலிக்கருவி போன்ற வேறு உதவிகள் பெறுவதற்கு எந்த தடையுமில்லை.

உதவிகள் பெற:
1) கல்வி உதவித்தொகைக்கு - பயிலும் பள்ளி , கல்லூரிகளிலேயே விண்ணப்பங்கள் கிடைக்கும்.
2) கல்வி, கடை, தொழிலுக்கான கடன்கள்: கடனுக்குரிய அளவு பொருத்தும், முறைகளை உள்ளடக்கியும் அதற்குரிய பல இடங்களில் அணுக வேண்டும்.
3) செயற்கை உறுப்புகள்: மாவட்ட சமுக நலத்துறை, மாவட்ட ஆட்சியர்.
4) மாதாந்திர உதவித்தொகை: மாவட்ட ஆட்சியர், மாவட்ட சமுக நலத்துறை, சமுக நலத்துறை தனி வட்டாட்சியர் ( தாசில்தார் ) வட்டாட்சியர் அலுவலகம்.

‪#‎முக்கியமாக‬ உதவிகள் பெறுவதற்கு கையூட்டு (இலஞ்சம் ) கொடுத்து பழகவும், முயற்சிக்கவும் வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

‪#‎எம்முடைய‬ பதிலில் குறையோ தவறோ இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டி திருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே
 

No comments: