Friday, March 13, 2015

'ரிவர்சில்' இயங்கும் #மாற்றுத்திறனாளி வாகனம்:


திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரி மாணவர்கள் 'ரிவர்சில்' இயங்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் சிலமாற்றங்களை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் தயாரிக்கப்படுகிறது. இந்த வாகனங்களை 4 சக்கர வாகனங்களைப் போல'ரிவர்சில்' இயக்க முடியாது. குறுகிய தெருக்கள், வளைக்க முடியாத இடங்களில், இறங்கி பின்புறமாக தள்ளிச் செல்ல வேண்டும். இதுபோன்ற சமயங்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க'ரிவர்சில்' இயங்கும் வாகனத்தை திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரி வடிவமைத்துள்ளது. ஆட்டோமொபைல் பேராசிரியர் ராஜவேல் உதவியோடு இறுதியாண்டு மாணவர்கள் எஸ்.லோகேஷ், டி.சிவா, ஏ.ஹெர்பாட்பிலிப் வடிவமைத்துள்ளனர்.


அவர்கள் கூறியதாவது:

'ரிவர்சில்' இயக்க வசதியாக வாகனத்தின் இடதுபுறத்தில் 'கியர் பாக்ஸ்' பொருத்தினோம். இதை தனித்தனி செயின் மூலம் இன்ஜின், பின்சக்கரத்தில் இணைத்தோம். 'கியர் பாக்சில்' உள்ள கம்பியை கையால் பின்பக்கம் தள்ளிவிட்டு வாகனத்தை 'ரிவர்சில்' இயக்க முடியும், இதற்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் செலவானது. அதிகளவில் தயாரிக்கும்போது செலவை குறைக்க முடியும், என்றனர். மாணவர்களை கல்லூரி இயக்குனர் சந்திரன், கல்லூரி முதல்வர் பழனிச்சாமி, துறைத்தலைவர் சிவக்குமார் பாராட்டினர்.


தகவல்:

http://www.dinamalar.com/news_detail.asp?id=1203839

No comments: