Friday, July 19, 2013

கிடப்பில் தமிழக நதிநீர் இணைப்பு திட்டங்கள்....




பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி இந்த தமிழக நதிகளை உடனே இணைப்பதற்காக, 3 திட்டங்கன் தயாரித்துக் கொடுக்கப்பட்டு, ஏழு வருடங்கள் முடியப் போகிறது. ஒவ்வொரு முறையும் வறட்சிக் காலங்களில் அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும்  மல்லுக்கட்டிக் கொண்டும், உச்ச நீதி மன்றத் தீர்ப்பை எதிர் நோக்கிக் கொண்டும், அதற்கான திருப்பி பெறமுடியாத செலவீனங்களும்  நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கான மதிப்பீடும் உயர்வதுமாகத்தான் உள்ளது. விவசாயத்திற்கும், குடிநீருக்கும், அல்லல் படும் மக்களின் போராட்டங்களும் தற்காலிக சமாதானங்களும் தான் நிலைத்திருக்கிறதே தவிர, வாழ்வாதாரங்களுக்கான செயல்களை செயல்படுத்த, ஆட்சி செய்யும் அரசுகளுக்கு ஏனோ நினைவுக்கே வருவதில்லை. 

ஒரு பக்கம் நகரங்கள் விரிவடைவதால், அருகிலுள்ள விளைநிலங்கள் அழிந்து மனைகளாகின்றன. தமிழகத்தின் பெருபாலான நிலங்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதால், விவசாய வளர்ச்சியும் இல்லை. இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிய தடையாகவும் அமையும். வீணாக கடலில் கலக்கும் நீரை, தடுப்பணைகள், ஏரிகள், குளங்களில் சேமித்தும், கால்வாய்கள் மூலமாக நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தினால் விவசாயச்மும் செழிக்கும், நிலத்தடிநீர் பெருகி குடிநீர் பற்றாக்குறையும் மறையும்.

உடனடியாக தாமதமில்லாமல் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க திட்டத்தை துவக்கி செயல்படுத்தினாலே தமிழகம் சிறப்பாக தானே முன்னேறும். ஓட்டுவங்கியை மனத்தில் கொண்டு இலவசங்களை அளிப்பதை விட, இதுபோன்ற செயல்களுக்கு அந்த நிதியை திருப்பலாம். அதேபோல முழுத்திட்டத்தையும் செயல்படுத்தியப் பிறகுதான் நீர் திறக்கப்படும் என்ற நிலையை தளர்த்தி, இலகவான  பகுதியைகளை விரைவாக முடித்து, தாமதம் செய்யாமல் அவ்வப்போதே நீரை செலுத்தி பயன்பாட்டுக்கு அனுமதித்து விட்டால், இலவசத்தை நிறுத்தியதால் ஏற்பட்ட வருத்தத்தை மக்களும் உணர்ந்து மறந்து விடுவார்கள். இப்போது கிடைக்கும் ஓட்டை விட, அதிகமான ஆதரவு கிடைக்குமே தவிர குறையாது என்பது நிச்சியம்.

மத்தியில் கூட்டணி அட்சி, மாநிலங்களின் விருப்பு வெறுப்புகள் பொறுப்பற்ற தனங்கள் இப்படி பல்வேறு காரணங்களால் தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பிலேயே உள்ளது. என்று அது நடைமுறைக்கு வருமென்று கூறவேயியலாத நிலை.   அதுவரை பொருத்திருந்தோமானால் தமிழகம் நாடாக இருக்காது சுடுகாடாக மாறிவிடும். அதனால் இப்பொழுது நீர் குறைவினால் படும் பாட்டிலிருந்து, பாடம் கற்றவர்களாய், தமிழகத்தைக் காக்க, முதலில் தமிழக நதிகளை இணைப்போம். என்றாவது ஒரு நாள் தேசிய நதிநீர் இணைப்பு செயல்பாட்டிற்கு வந்தால், அன்று பக்கத்து மாநிலங்களிலிருந்து நீரை பெற குறைந்த தூரம் வாய்க்கால்கள், கால்வாய்கள் வெட்டி இணைப்பு பெற்று விடலாம்.

இதை இன்றைய அரசு நினைவிற்க் கொள்ளுமா? உணருமா? செயல்படுத்துமா? நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை துவக்கி விட்டால், மத்திய அரசு நிதியையும் பெறலாம், மக்களிடமிருந்து திருப்பி அளிக்கக்கூடிய வைப்பு நிதிகளையும் பெறலாம்.

ஒருவனுக்கு இலவசமாக உணவு அளிப்பதை விட, அவன் உழைத்து சம்பாரிக்க (வருமானமீட்ட) வாய்ப்பு அமைத்துக் கொடுத்தால், அவன் குடும்பமே செழிப்புறும் என்பதை என்று புரிந்து கொள்வார்களோ?


#‎இந்த‬ இணைப்பில் உள்ள படம் ஒரு மாதிரிக்காக மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பார்வைக்காக இந்த இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது.
http://www.skyscrapercity.com/showthread.php?t=1437161

No comments: