Wednesday, January 6, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறுதொழில் கடன் - கேல்வி பதில் 7



கேள்வி: மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்டிக்கடைப் போன்ற சிறு தொழில்கள் புரிய, மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடன் கிடைக்குமா? என்ன செய்ய வேண்டும்?
பதில்: பெட்டிக்கடைப் போன்ற சிறு தொழில்களுக்கு மாவட்ட சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம் மூலமாக மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடன் தேசியமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து, அதிகபட்சம் ரூபாய் 2௦௦௦௦/= வரை பெறலாம்.

செய்ய வேண்டியவை:
1)      பெட்டிக்கடை எனில் சாலை நடைப்பதைகள் மற்றும் அரசு இடங்களாக இருந்தால், அங்கு கடை வைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும்.
2)      உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உங்களுக்கு கடனில்லா சான்றும், மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடனுக்கு, கடன் தர ஒப்புதலும் பெறவேண்டும்.
3)      முக்கியமாக நீங்கள் கேட்க கூடிய கடனுக்கு, என்னென்ன செலவுகளுக்காக என்ற விபர பட்டியலை, வங்கி அதிகாரியின் அறிவுரைப்படி வழங்கவேண்டும்.
4)      அந்த வங்கியில் உங்கள் பெயரில் கணக்கு இருக்கவேண்டும் அல்லது புதிதாய் துவக்கவேண்டும். உங்கள் பங்கு தொகையினை வங்கியில் குறிப்பிடும் அளவுக்கு, உங்கள் கணக்கில் செலுத்தவேண்டும்.
5)       மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகநலத்துறை அலுவலகத்தில் கடன், மற்றும் அதற்குரிய மானிய (சப்சீடி) அளவுக்கும் ஒப்புதல் பெறவேண்டும்.
6)      வீட்டிலிருந்தபடி அல்லது வேறு தொழில்களுக்கும் மானியத்துடன் கடன் பெறலாம்.

7)      சமூகநலத்துறை அலுவலக ஒப்புதலை, வங்கியில் கொடுத்து கடனை பெற்று தொழில் நடத்தலாம்.     

8)      முதலும் கடைசியுமாக ஒன்று: நீங்கள் வாங்கும் கடனுக்குறிய தவணைத்தொகையை, தவணை தவறாமல் சரியான நாளில் முழுமையாக செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தினால் கூடுதல் வட்டி செலுத்தாமல், மானியத்தின் முழு பலனையும் அனுபவிக்கமுடியும்.

9)      மேலும் தொழிலுக்கான புது கடன் அல்லது வளர்ச்சி கடனை, எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பெற்று, நீங்கள் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து, சாதனையாளராகவும், சிறப்பான உயர் நிலையையும்  அடைய முடியும்.


*தொழிலிலே உயர்ந்து, வாழ்வில் சிறப்பாய் வாழ. வாழ்த்துக்கள் நண்பர்களே!

No comments: