Wednesday, January 6, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் - கேல்வி பதில் 6


 கேள்வி: 40% ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்குமா?
பதில்: 40% சதவீதமும், அதற்கு மேல் ஊனமுள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும்.
கேள்வி: 40% சதவீத ஊனமுடைய நான், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிகிறேன். வீட்டிலிருந்து சென்று வர, அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் பெற என்ன செய்ய வேண்டும்?
பதில்: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், பணியாற்றுகின்ற நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம், குடும்ப அட்டை நகலுடன், விண்ணப்பம் எழுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் நடைப்பெறும் குறைதீர்க்கும் நாளில், மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட  சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலக அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.
 கேள்வி: வட்டாச்சியர் (தாலுக்கா) அலுவலக சமூகநலத்துறை வட்டாச்சியரிடம்  விண்ணப்பிக்கலாமா / கூடாதா?
பதில்: விண்ணப்பிக்கலாம். ஆனால், மாவட்ட அளவில்   மாற்றுத்திறனாளிகளுக்கான நல சமூகநலத்துறை அலுவலகம் தனியாகவே இருப்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பதே, விரைவான நடவடிக்கைக்கும், விண்ணப்பத்தின் நிலைக்குறித்த தகவலை அறிந்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு சிரமமுடையவர்கள், தாலுக்கா) அலுவலக சமூகநலத்துறை வட்டாச்சியரிடம் / அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு:
1)      நடக்கவியலா மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் கிடைக்கும்.
2)      கல்லூரியில் படிப்பவர்கள், அரசு / தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சொந்த தொழில் புரிபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
3)      படிப்பவர்கள், பணிபுரிபவர்கள், அந்தந்த தலைமையிடத்திலிருந்து சான்று பெற்று (உண்மை சான்றும்), வாடகையிடங்களில் தொழில் செய்பவர்கள், அவ்விடத்தின் வாடகை சான்று, சொந்த இடமாக இருப்பின், இருப்பிட வரி / தொழில் வரி சான்று அல்லது மின்னிணைப்பு கட்டணம் ( இதில் தேவையானதை நகல் இணைக்க வேண்டும்)
4)      விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தில் இடம், தேதி குறிப்பிடுவதுடன், இணைப்பு சான்றுகளையும் பற்றியும் முடிவில் தவறாமல் குறிப்பிடவும்.
5)      விண்ணப்பத்தையும், வேறு உண்மை சான்றுகள் இணைத்தால் அதையும் நகல் எடுத்து  பத்திர படுத்திக்கொள்வது நல்லது. 

#இதில் தவறு, குறைப்பாடுகள் இருப்பின் தெரிந்தவர்கள் எடுத்துக்கூறி திருத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

No comments: