Monday, June 16, 2008

மனித நேயம் மறக்கலாமா ???....

ஜூன் 15, 2008 தேதியிட்ட தினமலர்- வாரமலரில் 'இது உங்கள் இடம்'

என்ற பகுதியில் விருதுநகர்.கு.பாலசுப்ரமணியன் என்ற வாசகர்,

மேற்கண்ட தலைப்பில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதனால் ஏற்பட்ட

மன உளைச்சலை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள, அவர் எழுதியதை,

அப்படியே கீழே பதித்துள்ளேன். இதோ,

திருச்சி பேருந்து நிலையத்தில், அரவாணி ஒருவர் இயற்கை

இபாதையின் காரணமாக, அங்குள்ள கழிவறைக்கு 'டாய்லெட்'

சென்றார். அப்போது அங்கிருந்த ஆண்களும், பெண்களும் சேர்ந்து

அவரை, உள்ளே விட மறுத்தனர். அவர்களின் செய்கையால்

உள்ளத்தாலும், இயற்கை உபாதையின் தீவிரத்தாலும் மிகவும்

பாதிக்கப் பட்டு, இருந்த நிலையிலேயே, மலம் கழித்து விட்டார் ( டூ- பாத்ரூம் போய் விட்டார்).

அதையும் அங்குள்ளவர்கள் பார்த்து சிரித்தனரே தவிர, யாரும் அனுதாப படவோ

அல்லது அந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்கவோ துணியவில்லை.

அவருக்கு ஆதரவாக பேசிய எனக்கும், கேலிப்பேச்சே

பரிசாக் கிடைத்தது. பின் அந்த அரவாணி அழுதுக் கொண்டே

போய் விட்டார்.

மனிதர்களே... வாடிய பயிர் மேல் காட்டும் வள்ளலார் ஆக நீங்கள்

இல்லாவிட்டாலும் கூட, சக மனிதர்கள் மேல் மனிதநேயமாவது,

அவர்களின் இக்கட்டான சூழ்நிலையில் காட்டுங்கள். மனிதநேயத்தை

மறந்து விட்டீர்களா ? இல்லை, மனிதன் என்பதையே

மறந்து விட்டீர்களா? என்று கேட்டு எழுதியுள்ளார்.

இதை வாசிக்கின்ற வாசகர்களாகிய நீங்களும் அறிய வேண்டும்.

மற்றவர்களையும் உணரச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்

கொள்கிறேன்.

மனிதத்தைஉணர்வோம் ! மனிதநேயத்தை வளர்ப்போம் !!

No comments: