Tuesday, June 17, 2008

150 முறை ரத்த தானம்- முதியவரின் சாதனை.

அடிக்கடி ரத்த தானம் செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து,நோய் தொற்றுக்கு ஆளாகி விடுவோம் என்ற மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளார் டில்லியை சேர்ந்த தற்போது 75 வயதாகும் முதியவர் சுரேஷ் காம்தாஸ்.
கடந்த 1962 ஆம் ஆண்டு இந்திய - சீன போரின் போது, படுகாயமடைந்த ஏராளமான வீர்ர்களுக்கு ரத்தம் தேவைப் பட்டது. அப்போது, தேசிய அகடமியை சேர்ந்த நண்பர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தார் சுரேஷ் காம்தாஸ். அங்கு, காயமடைந்திருந்த ஒரு பெண்ணுக்கு நான்கு மகன்கள் இருந்தும், ஒருவரும் ரத்ததானம் அளிக்க முன் வரததால், அப்பெண் ரத்தத்திற்காக காத்திருந்ததைப் பார்த்தார். அப்போதுதான் ரத்ததானத்தின் அவசியத்தை அறிந்தார் சுரேஷ் காம்தாஸ்.
அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக முதல் முறையாக ரத்ததானம் செய்தார். அதிலிருந்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ரத்ததானம் செய்து வருகிறார். சிலர் பணத்திற்க்கா ரத்ததானம் செய்வதுண்டு. ஆனால், ரத்ததானம் செய்ததிற்காக இதுவரை ஒரு காசு கூட சுரேஷ் காம்தாஸ் வாங்கவில்லை.

கடைசியாக 2000 வது ஆண்டு வரை ரத்ததானம் செய்துள்ளார். ரத்ததானம் செய்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் தொற்று ஏற்படும் என்று பலரும் கூறி வந்தனர். அவர்களது எண்ணம் தவறானது என்பதை நிறுபித்துள்ளேன். உண்மையில் ரத்தத்தை தானமாக கிடைக்கப் பெற்றவர்களின் நல்லாசியுடன் நீண்டகாலம் வாழ முடியும் என்று, பெரிமிதமாக கூறுகிறார்.
இந்தியாவுக்கு ஆண்டு தோறும் 90 இலட்சம் யூனிட் ரத்தம் தேவைப் படுகிறது. ஆனால் சுரேஷ் காம்தாஸ் போன்ற தன்னார்வலர்கள் குறைவாக இருப்பதால், 60 இலட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே பெற முடிகிறது. இதில் 53 சதவிகிதம் மட்டுமே இலவசமாக தானம் பெறப்படுகிறது. கடந்த 2002ல் ரத்தம் கொடுத்தவர்களில் 43 சதவீதத்தினர் மட்டுமே தானமாக கொடுத்துள்ளனர். இந்தியாவை ஒப்பிடுகையில் மற்ற நாடுகளில் ரத்ததானம் செய்வது அதிகமாக உள்ளது. நேப்பாளத்தில் 90 சதவீதமும், தாய்லாத்தில் 95 சதவீதமும், இந்தோனேஷியாவில் 77 சதவீதமும், இலங்கையில் 60 சதவீதமும், மியான்மரில் 57 சதவீதமும் ரத்தம் தானமாக பெறப்படுகிறது. இந்தியாவில் தானமாக பெறப்படும் ரத்தத்தில் 47 சதவீதம், ஒருவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஆபத்தான நிலையில் கொடுப்பதற்காக அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களால் தானமாக கொடுக்கப் படுகிறது.
இனிமேல் அப்படி பார்க்காமல் 'இறைவனால் படைக்கப்பட்ட ரத்தத்தை, இறைவனால் படைக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் போது தவராமல் தர முயல்வோம்'.

பொதுவாக ரத்ததானம் செய்ய தகுதிகள்
1 ) 16 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட , 45 கிலோ எடைக்கு அதிகமுள்ள அனைவருமே ரத்ததானம் செய்யலாம்.
2 ) இவர்கள், எச்.ஐ.வி., ஹெபடடிஸ் பி மற்றும் சி நோய் தாக்கியவர்களாக இருக்கக் கூடாது என்பது முக்கியமான நிபந்தனையாகும்.
3 ) ரத்தத்தில் சிவப்பணுக்கள் 12.5 கிராம் அளவுக்கு இருக்க வேண்டும்.

சதாரணமாக ஒருவரது உடலில் 5.6 லிட்டர் ரத்தம் உள்ளது. தானமாக கொடுக்கப்படும் 450 மில்லி., ரத்தம், இரண்டே நாளில் மீண்டும் உடலில் உற்பத்தியாகி விடும் என்ற உண்மை பலருக்கு தெரிவது இல்லை. தொடர்ந்து ரத்தம் கொடுப்பதால், உடல் ரீதியான எந்த பிரச்சனையும் ஏற்படாது. தற்போதைய நிலையில், இந்தியாவுக்கு தேவையான ரத்தத்தில் 30 சதவீதம் குறைவாகவே உள்ளது. தன்னார்வமுள்ளவர்களால் மட்டமே இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே
' முடிந்த பொழுதெல்லாம்,
முடிந்த வரை தவராமல்,
முடிந்த அளவு தானம் செய்வோம் ரத்தத்தை'.

2 comments:

Unknown said...

ரத்த தானம் கொடுப்பவருக்கு ஒன்றும் ஏர்படாது அவர் ஆரோகியமாக இருக்கும் பச்சத்தில், ஆனால் ரத்தம் பெற்றுக் கொள்ளும் நோயாளிகள் மிக மோசமான உடல் நிலை பெறுவார்கள் என்பது உரிதி, ஏனொனில் RBC யின் வயது சுமார் 90 முதல் 120 நாட்கள், ஆனால் பிறர் இரத்தம் பெறும் பொழுது அது 9 நாட்கள்ல் அது இறந்து விடும். anibiotic and other medicines ஏற்றுக்கொள்ளாமல் இரத்தம் ஏற்றினால் அவர் இறந்து விடுவது உரிதி. இது போன்ற ரகசியங்கள் மறைக்க பட்டிருக்கிறது என்பது உன்மை

Dhavappudhalvan said...

அறிய தகவலை பதித்தமைக்கு மிக்க நன்றியுடன்,மகிழ்ச்சி அன்பரே.
மற்றொரு பக்கம், இது உண்மையாயின் மிக்க அதிர்ச்சிகரமானது.
இனிதாகட்டும் நாட்கள். உமது கருத்து பதிவுக்கு, எமது தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.