Monday, June 9, 2008

தேவை மன உறுதி

நம்மில் மிக பெருபான்மையோர், நம் உடல் குறைகளையே பெறிதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். நம்மை விட அதிக உடல் குறையுடையோர்களை அறியும் போதும்பார்க்கும் போதும்நம் குறைகள் சிறிதாகி ஊக்கமும் உத்வேகமும் அடையச் செய்யும். அப்படியானஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அமெரிக்காவில் டென்னசி மாநிலத்தில், மெம்பிஸ் என்ற இடத்தில் வசித்த டயானிஓடெல் ( வயது 63 ), இவருக்கு 3 வயதாக இருந்த பொழுது 'பல்போ ஸ்பைனல்'என்ற அபூர்வ போலியோ வியாதி தாக்கியது. அவர் சுவாசம் கூட விடமுடியாதபடி மிக மோசமாக பாதிக்கப்பட்டார். போலியோ தடுப்பூசி வராத காலம் அது.
அவர் பிரச்சனை தீர, ஏழு அடி உயர உலோக குழாயினுள், அவர் உடலை வைத்து, அதில் பொருத்தப்பட்ட இரும்பினாலான நுறையிரல் மூலம் செயற்க்கை சுவாசம்அளிக்கப்பட்டு, 60 ஆண்டு காலமாக அதிலேயே வாழ்ந்து வந்தார். ஒருநொடிக்கூட, அந்த உலோக குழாயிலிருந்து வெளியே வர முடியாது. அவருடன் யார் பேசினாலும், கண்ணாடியில் அவர் முகத்தைப் பார்த்து தான் பேசவேண்டும். நேரடியாக முகம் பார்த்து பேசினால் சுவாசப்பிரச்சனை அவருக்கு வந்து விடும்.

இப்படி படுத்தபடியே, பள்ளி,கல்லூரி படிப்புகளையும் படித்து முடித்தார்.அவர் படுத்திருந்த உலோக குழாயுடன் பொருத்தப் பட்டிருந்த இரும்புநுரையிரல்செயலிழக்காமலிருக்க மின்சார பாதுகாப்பு சாதனமும் உள்ளது. ஆனால், சமிபத்தில் ஏற்பட்ட, திடீர் மின்தடை பல நிமிடங்கள் நீடித்ததுடன் மின்பாதுகாப்பு சாதனமும் இயங்கவில்லை. இதனால் சுவாசிக்க முடியாமல் 'டயானி' திணறினார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க குடும்பத்தினர் எவ்வளவோ முயன்றனர். டாகடரை அழைத்து வருவதற்குள் அவர் உயிர் பிரிந்து விட்டது.

இவரைப் பற்றி டாக்டர்கள் கூறுகையில், 'பல்போ ஸ்பைனல்' என்னும் இந்தஅபூர்வ போலியோ நோய் தாக்கியவர்கள். வெளியில் நடமாட முடியாது. எந்தநோய்கிருமியும் தீண்டாத வகையில் உலோக குழாயில் வைத்துதான் பாதுகாக்கவேண்டும். அப்படி தான் 'டயானி' வைக்கப்பட்டிருந்தார். நோய் பாதித்தபின்பு 60 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததற்கு அவர் மன திடம்தான் காரணம் எனதெரிவித்துள்ளனர்.

அப்படி இருக்கையில் நாம் ஏன் பயப்பட வேண்டும். நம்மை பாதித்த நோயைப்பற்றி கவலைப் படாமல், நாம் செயலாற்ற வேண்டிய கடமைகளை மட்டும் நினைவிற்க்கொள்வோம்.

1 comment:

Unknown said...

இரத்த தான்ம் மற்றும் அரவாணர் குறித்த செய்திகள் அருமை. மனிதாபிமானம் எங்கே?