Monday, December 28, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.ஏ.எஸ். பயிற்சி



ஐ.ஏ.எஸ். படிக்கும் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். தடைக்கற்களையும் படிக்கற்களாக்கி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறவேண்டும் குறிக்கோளுடனும், முனைப்புடன் படிக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியதுவம் குறைந்திருந்தாலும், மக்களிடையே பெரும் மதிப்புள்ளது.
உடல் குறையோடு வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளை, அதிகாரத்தின் உச்சியில் அமரவைக்க ஆசைப்படுகிறேன். அதனால் தான் நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, நாமக்கல்லில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை ஆரம்பித்து வைத்தேன் என மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை துவக்கி வைத்து, சென்னை அறிவியல் நகர துணைத்தலைவராக பணியாற்றி வரும் சகாயம் அவர்கள் உரையாற்றினார்.
#மேலும் மதுரைக்கு அருகிலுள்ள ஒரு அரசு பள்ளியில் பேசும்போது, ஐ.ஏ.எஸ். முடித்து பணியில் சேர்ந்து 23 வருடங்களில் 23 முறை பணியிடைமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். இது என் நேர்மைக்கு கிடைத்த பரிசு எனவும், புவிப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி ( 33 சதவீதம் ) மரங்கள் இருக்க வேண்டும் என வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஆனால் 11 சதவீத மரங்கள்தான் உள்ளது. இது கவலைக்குரியது. நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்தபோது 20 இலட்சம் மரக்கன்றுகள் பள்ளி மாணவர்களால் நடப்பட்டன. இங்கும் அதுபோல் நடப்படவேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களால்தான் தமிழ் வளர்கிறது. எந்தநிலைக்கு உயர்ந்தாலும் தாய்மொழியான தமிழையும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் பேசினார்.

No comments: