Thursday, January 10, 2013

மடிக்கணினிக்கு மடியைக் கொடுக்காதீர்கள்

மடிக்கணினிக்கு மடியைக் கொடுக்காதீர்கள்.

பொதுவாகவே, உடலில் உள்ள விதைப்பை, குளிர்காலத்தில் சுருங்கியும், வெயில்காலத்தில் சற்றுத் தளர்வான நிலையில் இருந்து, வெப்ப நிலையைச் சமன் செய்யும் ஆற்றல் பெற்றவை. வெப்ப நிலை அதிகமானால்,  அந்த உஷ்ணத்தைத் தாங்காமல் விந்தனுக்களில் டி.என்.ஏ.,  ஃப்ராக்மெண்டேஷன் ஏற்படும் அளவுக்கு உயர்கிறது. நீண்ட நேரம் மடிக்கணினியை, மடியில் வைத்து பயன்படுத்துவோர் மட்டுமின்றி, லாரி ஓட்டுனர்கள், அடுப்பின் அருகில் எந்த நேரமும் இருக்கும் சமையல்காரர்கள், அனல் மிகுந்த இடங்களில் பணிபுரிபவர்கள் அனைவருக்குமே விந்தனு சிதைவு பிரச்னை வரலாம். அதிக நேரம் மடிக்கணினியைப் பயன்படுத்தும் பெண்களுக்கு, தொடைப்பகுதியில் நிரந்தரமாகத் தோல் கருத்துப் போகலாம். தோல் தொடர்பான பிரச்னைகள் வரவும் வாய்ப்புகள் உண்டு. மேற்குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியில், கூலர் பேட்டுகளோ, மடி மீது தலையணை வைத்து அதன் மேல் மடிக்கணினியை இயக்குவதோ பயன் தராது என்றும் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, மடிக்கணினியை மேஜை மீது வைத்து  இயக்குவதே சிறந்த முறையாகும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மடிக்கணினியை மடி மேல் வைத்து தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்ப்பட்டால், கால்களை நங்கு அகட்டி வைத்துக் கொண்டு மடிக்கணினியைப் பயன்படுத்தினால் பாதிப்புக் குறையும்.

முடிந்த வரை, மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்தாமல் மேஜை மீது  வைத்துப் பயன்படுத்தி, சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். போதுமான உடற்பயிற்சி செயுங்கள். சந்தேகம் இல்லை. ஆரோக்கியமான விந்தும், ஆரோக்கியமான சந்ததியும் சாத்தியமாகும்.

தகவல்:
மகபேறு மற்றும் குழந்தை பேறின்மை மருத்துவர் சரத் பட்டினா.

No comments: