தெரிந்து, நினைவில் வைத்திருங்கள்....
விபத்தில் காயமடைந்து ஒருவர், சுயநினைவு இழந்து மயக்கத்தில்
கிடந்தால், முகத்தில் தண்ணீர் தெளித்து, குடிக்க தண்ணீரும் கொடுப்பது வழக்கத்தில் உள்ளது.
மயக்கத்தில் உள்ள ஒருவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கக் கூடாது. ஏனென்றால்
வாய்க்குள் நாக்கு கீழ் நோக்கி தொங்கி, தொண்டையை அடைத்திருந்தால், தண்ணீர் சுவாசப்பாதையை அடைந்து, விரைவில் அவரை
உயிரிழக்க செய்து விடும். விபத்தில் காயமடைந்து, சுயநினைவு இழந்து மயக்கத்தில் கிடப்பவருக்கு
முதலுதவி என்று குடிக்க தண்ணீர் கொடுத்து விடாதீர்கள்.

No comments:
Post a Comment