கூட்டுறவு தேர்தலில் மாற்றுத்திறனாளி மனு நிராகரிப்பு. கோர்ட்டுக்கு செல்ல முடிவு.
தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில், தருமபுரி மாவட்டத்தில் பொது நூலகத்துறை கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் 2008ம் ஆண்டு இயக்குனராக செயல்பட்ட பிளஸ் 2 படித்த மாற்றுத் திறனாளியை தமிழ் மற்றும் ஆங்கிலம் படிக்கத் தெரியாதென , வேட்பு மனுவை நிராகரித்து இருக்கிறார்கள்.
தருமபுரி மாவட்ட பொது நூலகத்தில், நூல் கட்டுனராக பார்வையற்ற மாற்றுத்திறனாளி சரவணன் , நிரந்தர ஊழியராக பணி புரிந்து வருகிறார்.
இவர் பொது நூலகத்துறை கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் 20 ஆண்டாக உறுப்பினராக இருந்து வருகிறார்.28 (எ) 29ம் தேதி பொது நூலகத்துறை கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் இயக்குனர் பதவிக்காக, நல்லம்பள்ளி பகுதி தேர்தல் அலுவலர் லோகநாதனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு பரிசீலனையின் பொது, சரவணனின் மனு நிராகரிக்கப்பட்டது. இது கூரித்து தேர்தல் அலுவலர் கூறுகையில், "கூட்டுறவு சங்க விதிமுறைப்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தவர் மட்டும் போட்டியிட முடியும். இதன் அடிப்படையில் பார்வையற்ற சரவணன் மனு நிராகரிக்கபடுள்ளது," என்றார்.
இது குறித்து சரவணன் கூறியதாவது,, நான் பொது நூலகத்துறை கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் 2008ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு, இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். தேர்தல் விதிமுறையில் பார்வையற்ற மாற்றுத்திரனாளிகள் போட்டியிட முடியாதென குறிப்பிடப் படவில்லை.
பார்வையற்ற நான் பிளாஷ் 2 தேர்ச்சிப் பெற்றுள்ளேன். எனக்கும் மற்றவர்கள் படித்துக் காட்டுவதுன்மூலம் புரியும் சக்தி உண்டு. படிக்கத் தெரியாதவன் என கூறி ன் மனு நிராகரிக்கப் பட்டுள்ளது, வேஷனை அளிக்கிறது.
கூட்டுறவு சங்க தேர்தலில் எதிர்காலத்தில் பார்வையற்ற மாற்றுத்திரனாளிகள் போட்டியிட முடியாதென நிராகரிக்கக் கூடாது. இதற்காக நீதி மன்றத்திற்கு செல்ல உள்ளேன் என கூறியுள்ளார்.
*** அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஆட்டுவிக்கும் ஆட்டத்திற்கு அளவேயில்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு விசயத்திற்கும், நீதிமன்றத்தை நாடித்தான் தீர்வுப் பெற முடியுமென செய்வது, செயல்படுவது தகுமா?
செய்தி: காலைக்கதிர் நாளிதழ். 31/03/2013
.
No comments:
Post a Comment